• Jan 19 2025

10 மாத ஆண் குழந்தையை நீரில் அமிழ்த்தி கொலை செய்த தாய் - இலங்கையில் கொடூரம்

Chithra / Jan 19th 2025, 12:07 pm
image

 

அனுராதபுரம்  - ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளுகஸ்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் பத்து  மாதம் நிரம்பிய ஆண் குழந்தையொன்றை நீரில் அமிழ்த்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனகம, பலுகஸ்வெவ  பகுதியை வசிப்பிடமாக கொண்ட பத்து மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. 

இந்த சம்பவம் கடந்த  16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட  ஹபரணை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரணை பகுதியில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக 17 ஆம் திகதி ஹபரணை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். 

உயிரிழந்த குழந்தை தனது தாய், தந்தை மற்றும் சகோதரன், சகோதரியுடன்  வசித்து வந்ததுள்ளது. 

தந்தை  வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், தாய்  வீட்டுக்கு பின்னாலுள்ள நீர் நிரம்பிய குழியில் பிள்ளையை  நீரில் அமிழ்த்தி கொலை செய்ததாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து 34 வயதுடைய பளுகஸ்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட குழந்தையின் தாயை ஹபரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் சடலம், நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

10 மாத ஆண் குழந்தையை நீரில் அமிழ்த்தி கொலை செய்த தாய் - இலங்கையில் கொடூரம்  அனுராதபுரம்  - ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளுகஸ்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் பத்து  மாதம் நிரம்பிய ஆண் குழந்தையொன்றை நீரில் அமிழ்த்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புலனகம, பலுகஸ்வெவ  பகுதியை வசிப்பிடமாக கொண்ட பத்து மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த  16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட  ஹபரணை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.ஹபரணை பகுதியில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக 17 ஆம் திகதி ஹபரணை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். உயிரிழந்த குழந்தை தனது தாய், தந்தை மற்றும் சகோதரன், சகோதரியுடன்  வசித்து வந்ததுள்ளது. தந்தை  வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், தாய்  வீட்டுக்கு பின்னாலுள்ள நீர் நிரம்பிய குழியில் பிள்ளையை  நீரில் அமிழ்த்தி கொலை செய்ததாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதனையடுத்து 34 வயதுடைய பளுகஸ்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட குழந்தையின் தாயை ஹபரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குழந்தையின் சடலம், நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement