• May 06 2024

லண்டனில் சாதித்துவரும் இலங்கை தமிழ் இரட்டை சகோதரிகள்...! samugammedia

Chithra / Nov 1st 2023, 6:41 am
image

Advertisement

 

இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் சகோதரிகள் இருவர் ஹொட்டல் தொழிலில் பிரபல்யமடைந்து வருகிறார்கள்.

கண்டியில் பிறந்து, கொழும்பில் வளர்ந்த வசந்தினி, தர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகளே லண்டனில் ஹொட்டல் துறையில் சாதித்து வருகின்றனர்.

இவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை விரும்பி, 2011ஆம் ஆண்டு தங்கள் மற்ற சகோதரிகளுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.

லண்டனில் பல இடங்களுக்குச் சென்று பார்த்தும் இலங்கை உணவு கிடைக்காததால், சகோதரிகளுக்கு லண்டனில் இலங்கை உணவகம் அமைக்க யோசனை தோன்றியுள்ளது.அதன் விளைவாக கறபிஞ்சா என்ற உணவகத்தை நிறுவியுள்ளனர்.

வசந்தினி, தர்ஷினி சகோதரிகளுக்கு தங்கள் தாயிடம் கற்ற தமிழர்களின் உணவு செய்முறையையும், தங்களை கவனித்துக்கொண்ட பெண்ணிடம் கற்ற சிங்களவர்களின் உணவு செய்முறையையும் உபயோகித்து முதலில் ஒரு உணவகம் ஆரம்பித்த சகோதரிகள், பின்னர் நான்கு உணவகங்களை அமைத்துள்ளனர்.

தங்கள் தாயைப் போலவே, உணவகத்துக்குத் தேவையான மசாலா பொடிகளையெல்லாம் தாங்களே தயார் செய்து, அப்படியே வீட்டுச் சுவையில் உணவுகளை தயாரித்து வழங்குகிறார்கள்.

லண்டனில் வாழும் இலங்கையர்களும் தங்கள் ஊர் உணவை சுவைக்க ஓர் வாய்ப்பாக உள்ளது. 


லண்டனில் சாதித்துவரும் இலங்கை தமிழ் இரட்டை சகோதரிகள். samugammedia  இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் சகோதரிகள் இருவர் ஹொட்டல் தொழிலில் பிரபல்யமடைந்து வருகிறார்கள்.கண்டியில் பிறந்து, கொழும்பில் வளர்ந்த வசந்தினி, தர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகளே லண்டனில் ஹொட்டல் துறையில் சாதித்து வருகின்றனர்.இவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை விரும்பி, 2011ஆம் ஆண்டு தங்கள் மற்ற சகோதரிகளுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.லண்டனில் பல இடங்களுக்குச் சென்று பார்த்தும் இலங்கை உணவு கிடைக்காததால், சகோதரிகளுக்கு லண்டனில் இலங்கை உணவகம் அமைக்க யோசனை தோன்றியுள்ளது.அதன் விளைவாக கறபிஞ்சா என்ற உணவகத்தை நிறுவியுள்ளனர்.வசந்தினி, தர்ஷினி சகோதரிகளுக்கு தங்கள் தாயிடம் கற்ற தமிழர்களின் உணவு செய்முறையையும், தங்களை கவனித்துக்கொண்ட பெண்ணிடம் கற்ற சிங்களவர்களின் உணவு செய்முறையையும் உபயோகித்து முதலில் ஒரு உணவகம் ஆரம்பித்த சகோதரிகள், பின்னர் நான்கு உணவகங்களை அமைத்துள்ளனர்.தங்கள் தாயைப் போலவே, உணவகத்துக்குத் தேவையான மசாலா பொடிகளையெல்லாம் தாங்களே தயார் செய்து, அப்படியே வீட்டுச் சுவையில் உணவுகளை தயாரித்து வழங்குகிறார்கள்.லண்டனில் வாழும் இலங்கையர்களும் தங்கள் ஊர் உணவை சுவைக்க ஓர் வாய்ப்பாக உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement