• May 06 2024

ரஷ்யா-உக்ரேன் போரில் பணியாற்ற இலங்கையர்கள் கடத்தல்..! - விசாரணை ஆரம்பம்

Chithra / Apr 24th 2024, 3:12 pm
image

Advertisement

 

ரஷ்யா  மற்றும் உக்ரைனில் இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் வெளிவிவகார அமைச்சும் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் போரில் ஈடுபடுவதற்காக ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் பாரிய மோசடி இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, வெளிவிவகார அமைச்சும் இவ்விவகாரத்தை ஆராய்ந்து வருகின்றது.

மோசடி செய்பவர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனில் வேலை வழங்குவதற்காக ஒரு தனிநபரிடமிருந்து 1.8 மில்லியன் ரூபாய்களைப் பெற்றுள்ளனர்.

இவ்வாறு ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு எத்தனை இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பதையும், இந்த மோசடிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இது தொடர்பில் நாளை சபையில் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரேன் போரில் பணியாற்ற இலங்கையர்கள் கடத்தல். - விசாரணை ஆரம்பம்  ரஷ்யா  மற்றும் உக்ரைனில் இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் வெளிவிவகார அமைச்சும் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் போரில் ஈடுபடுவதற்காக ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் பாரிய மோசடி இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, வெளிவிவகார அமைச்சும் இவ்விவகாரத்தை ஆராய்ந்து வருகின்றது.மோசடி செய்பவர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனில் வேலை வழங்குவதற்காக ஒரு தனிநபரிடமிருந்து 1.8 மில்லியன் ரூபாய்களைப் பெற்றுள்ளனர்.இவ்வாறு ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு எத்தனை இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பதையும், இந்த மோசடிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.இந்நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இது தொடர்பில் நாளை சபையில் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement