• May 05 2024

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - 80 விமானிகள் இல்லை – விமான சேவைகள் இரத்து – சபையில் வெளியான தகவல்.! samugammedia

Chithra / Jun 23rd 2023, 1:58 pm
image

Advertisement

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 80 விமானங்களுக்கு, விமானிகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக ஜூன் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 13 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சபை நடவடிக்கைகள் ஆம்பமாகியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்யவிருந்த பயணிகள் அந்த சுற்றுவட்டாரத்திலுள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர்.

இதற்கு அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பது யாருக்காவது தெரியுமா.? 

விமானிகள் கொரோனா காலத்தில் கூட பணிக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இன்று ஏன் பணிக்கு வருவதில்லை.

இவற்றின் உண்மைத்தன்மையை மறைத்து அமைச்சர் சபையில் கருத்து வெளியிடுகின்றார்.

விமான நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டதே இதற்கு காரணம்.

விமான நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சாலைகளில் பைகளை மக்கள் இழுத்துச் செல்கின்றனர்.

நேற்றையதினம் சபையில் நான் லாட்டரி வாரியம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தேன்.

ஆனால் அதனை எந்த தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை. ஏனெனில் அவற்றைப் போட்டால் விளம்பரங்கள் கிடைக்காது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒலிபரப்பு ஆணையச் சட்டம் நன்றாகவே இருக்கிறது


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - 80 விமானிகள் இல்லை – விமான சேவைகள் இரத்து – சபையில் வெளியான தகவல். samugammedia ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 80 விமானங்களுக்கு, விமானிகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக ஜூன் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 13 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய சபை நடவடிக்கைகள் ஆம்பமாகியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்யவிருந்த பயணிகள் அந்த சுற்றுவட்டாரத்திலுள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர்.இதற்கு அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பது யாருக்காவது தெரியுமா. விமானிகள் கொரோனா காலத்தில் கூட பணிக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இன்று ஏன் பணிக்கு வருவதில்லை.இவற்றின் உண்மைத்தன்மையை மறைத்து அமைச்சர் சபையில் கருத்து வெளியிடுகின்றார்.விமான நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டதே இதற்கு காரணம்.விமான நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.சாலைகளில் பைகளை மக்கள் இழுத்துச் செல்கின்றனர்.நேற்றையதினம் சபையில் நான் லாட்டரி வாரியம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தேன்.ஆனால் அதனை எந்த தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை. ஏனெனில் அவற்றைப் போட்டால் விளம்பரங்கள் கிடைக்காது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒலிபரப்பு ஆணையச் சட்டம் நன்றாகவே இருக்கிறது

Advertisement

Advertisement

Advertisement