• May 11 2024

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி..!samugammedia

Sharmi / Oct 21st 2023, 6:49 am
image

Advertisement

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம்(20) இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்றையதினம் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பிந்திய இணைப்பு

நேற்று (20) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று (21) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. .

இது தொடர்பில் அமைச்சர் வெலிக்கடை பொலிஸாரிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி.samugammedia இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம்(20) இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்றையதினம் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்தே, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிந்திய இணைப்புநேற்று (20) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று (21) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. .இது தொடர்பில் அமைச்சர் வெலிக்கடை பொலிஸாரிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement