• May 18 2024

ஒரு நூலை பிடித்து கயிராக்கும் வேலையே இந்தியாவுடனான பேச்சு வார்த்தை..! சி.வி.கே.சிவஞானம் கருத்து..!samugammedia

Sharmi / May 30th 2023, 9:11 pm
image

Advertisement

இந்தியா பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவது என்பது ஊடகங்களின் ஊகம் எனவும் இது வரைக்கும் அது குறித்த உத்தியோகபூர்வ அழைப்புகள் இருப்பதாக தெரியவில்லை எனவும் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்  தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் புதுடில்லி பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கே சமூகம் ஊடகத்திற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

யாரும் கதைக்கும் சில்லறை கதைகளை கேட்ட பின்னர் இவ்வாறான தகவல்களை ஊடகங்களே பரப்புவதாகவும் கூறியுள்ளார்.

அது மட்டுமன்றி கூட்டமைப்பு என்று கூறும் பொழுதே முந்திய கூட்டமைப்போ அல்லது இன்றைய கூட்டமைப்போ என்ற பிரச்சினையும் உள்ளது. அது வேறு பிரச்சினை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

பேச்சுவார்த்தையில் சந்தித்து பேசலாம் என்று கதைப்பார்கள். கதைத்திருக்கலாம். ஆயினும் இவ்வாறான பேச்சுவார்த்தை குறித்து உத்தியோகபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் போன்று ஒரு நூலை பிடித்து கயிராக்கும் வேலைகளை ஊடகங்கள் செய்து வருவதாகவும்  தெரிவித்தார்.

ஒரு நூலை பிடித்து கயிராக்கும் வேலையே இந்தியாவுடனான பேச்சு வார்த்தை. சி.வி.கே.சிவஞானம் கருத்து.samugammedia இந்தியா பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவது என்பது ஊடகங்களின் ஊகம் எனவும் இது வரைக்கும் அது குறித்த உத்தியோகபூர்வ அழைப்புகள் இருப்பதாக தெரியவில்லை எனவும் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்  தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கட்சிகளின் புதுடில்லி பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கே சமூகம் ஊடகத்திற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், யாரும் கதைக்கும் சில்லறை கதைகளை கேட்ட பின்னர் இவ்வாறான தகவல்களை ஊடகங்களே பரப்புவதாகவும் கூறியுள்ளார். அது மட்டுமன்றி கூட்டமைப்பு என்று கூறும் பொழுதே முந்திய கூட்டமைப்போ அல்லது இன்றைய கூட்டமைப்போ என்ற பிரச்சினையும் உள்ளது. அது வேறு பிரச்சினை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  பேச்சுவார்த்தையில் சந்தித்து பேசலாம் என்று கதைப்பார்கள். கதைத்திருக்கலாம். ஆயினும் இவ்வாறான பேச்சுவார்த்தை குறித்து உத்தியோகபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் போன்று ஒரு நூலை பிடித்து கயிராக்கும் வேலைகளை ஊடகங்கள் செய்து வருவதாகவும்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement