• May 06 2024

ஆரம்பமானது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்! samugammedia

Chithra / May 22nd 2023, 4:13 pm
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

பாக்கு தெண்டல் உற்சவம் இன்று அதிகாலை சிறப்பாக இடம்பெற்ற நிலையில் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் மடை பரவி இன்று அதிகாலை 1.45 மணியளவில் வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெற்றது.

பாக்கு தெண்டலுக்கு சென்றவர்கள் ஆலயத்தை வந்ததும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து இன்றைய உற்சவம் நிறைவு பெற்றுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை அறிவிக்கும் முகமாக ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புகளை கொண்ட குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இது இடம்பெறுகிறது.

பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அறிவித்து இடம்பெறும் உற்சவத்தை அடுத்து 7 ஆம் நாள் முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுத்து உப்பு நீரிலே விளக்கேற்றி பொங்கல் உற்சவம் இடம்பெறும்.

அத்துடன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் தீர்த்தம் எடுக்கும் உற்சவம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு, காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் 04 ஆம் திகதியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் 05 ஆம் திகதியுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


ஆரம்பமானது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் samugammedia வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.பாக்கு தெண்டல் உற்சவம் இன்று அதிகாலை சிறப்பாக இடம்பெற்ற நிலையில் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் மடை பரவி இன்று அதிகாலை 1.45 மணியளவில் வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெற்றது.பாக்கு தெண்டலுக்கு சென்றவர்கள் ஆலயத்தை வந்ததும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து இன்றைய உற்சவம் நிறைவு பெற்றுள்ளது.வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை அறிவிக்கும் முகமாக ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புகளை கொண்ட குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இது இடம்பெறுகிறது.பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அறிவித்து இடம்பெறும் உற்சவத்தை அடுத்து 7 ஆம் நாள் முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுத்து உப்பு நீரிலே விளக்கேற்றி பொங்கல் உற்சவம் இடம்பெறும்.அத்துடன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் தீர்த்தம் எடுக்கும் உற்சவம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு, காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் 04 ஆம் திகதியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் 05 ஆம் திகதியுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement