• May 18 2024

பதுளை -தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியாகியது..!samugammedia

Sharmi / Jul 16th 2023, 9:35 am
image

Advertisement

பதுளை -தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் சாரதியின் கவனயீனமே என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நேற்றையதினம் தெமோதரை பகுதியில், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில், 8 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பாரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றப் பின்னர் விடுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 50 பேர் அடங்கிய வைத்தியர்கள் குழு சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சிரேஷ்ட வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை -தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியாகியது.samugammedia பதுளை -தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் சாரதியின் கவனயீனமே என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அத்துடன் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நேற்றையதினம் தெமோதரை பகுதியில், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களில், 8 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பாரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றப் பின்னர் விடுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 50 பேர் அடங்கிய வைத்தியர்கள் குழு சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சிரேஷ்ட வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement