• Jan 09 2025

மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்ந்தும் வீழ்ச்சி!

Chithra / Jan 8th 2025, 12:40 pm
image


இலங்கை மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியைக் கண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் 6,091 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தது. 

இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்த தொகையைவிட 360 மில்லியன் டொலர்கள் குறைந்துள்ளது. 

தொடர்ச்சியாக வளர்ச்சி போக்கில் இருந்த வெளிநாட்டு ஒதுக்கம், 

கடந்த ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்ந்தும் வீழ்ச்சி இலங்கை மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியைக் கண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் 6,091 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்த தொகையைவிட 360 மில்லியன் டொலர்கள் குறைந்துள்ளது. தொடர்ச்சியாக வளர்ச்சி போக்கில் இருந்த வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement