• Mar 06 2025

மகனுக்கு தந்தை செய்த கொடூரம்; உயிர் தப்பிய மனைவி! இலங்கையில் பயங்கரம்

Chithra / Mar 5th 2025, 11:32 am
image

 

இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்தில் தந்தையால் தாக்கப்பட்டு மகன் காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மகனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவத்தன்று, மகன் வீட்டினுள் பாடவேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், சந்தேக நபரான தந்தை தனது மகனின் தலையில் பொல்லால் தாக்கியுள்ளார்.

பின்னர், சந்தேக நபரான தந்தை தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தனது மனைவியையும் கத்தியால் தாக்கியதாகவும், எனினும் அவர் அதிலிருந்து தப்பியதாக தெரிய வருகிறது.

இதனையடுத்து, தந்தையும் மகனும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மகனுக்கு தந்தை செய்த கொடூரம்; உயிர் தப்பிய மனைவி இலங்கையில் பயங்கரம்  இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்தில் தந்தையால் தாக்கப்பட்டு மகன் காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மகனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.சம்பவத்தன்று, மகன் வீட்டினுள் பாடவேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், சந்தேக நபரான தந்தை தனது மகனின் தலையில் பொல்லால் தாக்கியுள்ளார்.பின்னர், சந்தேக நபரான தந்தை தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் தனது மனைவியையும் கத்தியால் தாக்கியதாகவும், எனினும் அவர் அதிலிருந்து தப்பியதாக தெரிய வருகிறது.இதனையடுத்து, தந்தையும் மகனும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement