• May 18 2024

தொடர்ந்து சரிகிறது டொலர்..! இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..! samugammedia

Chithra / May 29th 2023, 1:25 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி,  கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(29. 05.2023) மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தை காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் உயர்வை நோக்கி நகர்வதுடன் கடந்த  இரு நாட்களில் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(29.05.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.26 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.81 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 310.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  375.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 357.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    

தொடர்ந்து சரிகிறது டொலர். இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம். samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.இதன்படி,  கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(29. 05.2023) மேலும் அதிகரித்துள்ளது.இதற்கு முந்தை காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் உயர்வை நோக்கி நகர்வதுடன் கடந்த  இரு நாட்களில் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(29.05.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.26 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.81 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 310.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  375.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 357.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    

Advertisement

Advertisement

Advertisement