• Sep 08 2024

அரச வேலைக்காக 6மாத குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை!

Sharmi / Jan 24th 2023, 8:49 pm
image

Advertisement

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபரொருவர் அரசாங்க வேலையை தக்க வைத்துக்கொள்வதற்காக 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்து கொலை செய்துள்ளார்.

அத்தோடு 36 வயதான ஜவஹர்லால் மேக்வால், கீதா தேவி ஆகிய தம்பதியினரையே பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராஜஸ்தான் மாநில அரசாங்க கொள்கையின்படி அரச ஊழியர்கள் 2 பிள்ளைகளை மாத்திரமே பெற முடியும். 3 ஆவது பிள்ளை பிறந்தபின் அரச பணியிலிருந்து கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும்.

இந்நிலையில் தனக்கு ஏற்கெனவே இரு பிள்ளைகள் உள்ள நிலையில் 3 ஆவது குழந்தையான பெண் குழந்தையால் அரசாங்கத் தொழிலை இழக்க நேரிடும் என ஜவஹர்லால் மேக்வால் அச்சமடைந்தாராம்.

இதனால் அவர் மேற்படி பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பில்கானேர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என பில்கானேர் அத்தியட்சகர் யோகேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 


அரச வேலைக்காக 6மாத குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபரொருவர் அரசாங்க வேலையை தக்க வைத்துக்கொள்வதற்காக 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்து கொலை செய்துள்ளார்.அத்தோடு 36 வயதான ஜவஹர்லால் மேக்வால், கீதா தேவி ஆகிய தம்பதியினரையே பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ராஜஸ்தான் மாநில அரசாங்க கொள்கையின்படி அரச ஊழியர்கள் 2 பிள்ளைகளை மாத்திரமே பெற முடியும். 3 ஆவது பிள்ளை பிறந்தபின் அரச பணியிலிருந்து கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும்.இந்நிலையில் தனக்கு ஏற்கெனவே இரு பிள்ளைகள் உள்ள நிலையில் 3 ஆவது குழந்தையான பெண் குழந்தையால் அரசாங்கத் தொழிலை இழக்க நேரிடும் என ஜவஹர்லால் மேக்வால் அச்சமடைந்தாராம்.இதனால் அவர் மேற்படி பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ராஜஸ்தானின் பில்கானேர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என பில்கானேர் அத்தியட்சகர் யோகேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement