• Jun 01 2024

மத்தியிலிருந்து நிதியை பெற்று வடக்கை அபிவிருத்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது! வினோ எம்.பி samugammedia

Chithra / May 22nd 2023, 12:36 pm
image

Advertisement

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக வடக்கு மாகாணத்தில் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தாங்கள், வடக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று கடமைகளை பெறுபேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மத்திய அரசாங்கத்தின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்தாலும் தற்போது வடமாகாண சபை இயங்காமலிருக்கின்றது. 

வடமாகாணமென்பது அரசியலமைப்பிலுள்ள 13ம் திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட முறைமையின் கீழ் இந்த ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு காணப்படுகையில் இலங்கையின் சட்ட திட்டங்களிற்கேற்பவும் அரசியலமைப்பிற்கேற்பவும் வடமாகாணசபையை ஏற்றுக்கொண்டு  அதனூடாக மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று வடமாகாணத்தை அபிவிருத்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

கடந்த காலங்களில் பல ஆளுநர்கள் பதவிவகித்தாலும் இரண்டாவது தடவையாக hள்ஸ் அவர்கள் பதவியேற்றுள்ளார். 

அவருக்கு எங்களுடைய அரசியல் கடந்து  அபிவிருத்தி.மற்றும் ஏனைய அத்தியாவசிய விடயங்களிலே ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராக உள்ளோம்.

அவரும் இலங்கை அரசியலமைப்பிலுள்ள மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொண்டு மாகாணத்திற்கு கூடுதலான அபிவிருத்ணி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.  

நிர்வாக அமைப்புக்கள் யாழ் மாவட்டத்திற்குள் முடக்கப்படாமல்  குறிப்பாக வன்னி மாவட்டம் உட்பட அனைத்து இடங்களிற்கும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.- என்றார்.

மத்தியிலிருந்து நிதியை பெற்று வடக்கை அபிவிருத்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது வினோ எம்.பி samugammedia தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக வடக்கு மாகாணத்தில் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தாங்கள், வடக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று கடமைகளை பெறுபேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.மத்திய அரசாங்கத்தின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்தாலும் தற்போது வடமாகாண சபை இயங்காமலிருக்கின்றது. வடமாகாணமென்பது அரசியலமைப்பிலுள்ள 13ம் திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட முறைமையின் கீழ் இந்த ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.அவ்வாறு காணப்படுகையில் இலங்கையின் சட்ட திட்டங்களிற்கேற்பவும் அரசியலமைப்பிற்கேற்பவும் வடமாகாணசபையை ஏற்றுக்கொண்டு  அதனூடாக மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று வடமாகாணத்தை அபிவிருத்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.கடந்த காலங்களில் பல ஆளுநர்கள் பதவிவகித்தாலும் இரண்டாவது தடவையாக hள்ஸ் அவர்கள் பதவியேற்றுள்ளார். அவருக்கு எங்களுடைய அரசியல் கடந்து  அபிவிருத்தி.மற்றும் ஏனைய அத்தியாவசிய விடயங்களிலே ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராக உள்ளோம்.அவரும் இலங்கை அரசியலமைப்பிலுள்ள மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொண்டு மாகாணத்திற்கு கூடுதலான அபிவிருத்ணி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.  நிர்வாக அமைப்புக்கள் யாழ் மாவட்டத்திற்குள் முடக்கப்படாமல்  குறிப்பாக வன்னி மாவட்டம் உட்பட அனைத்து இடங்களிற்கும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement