• May 05 2024

ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது! தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு samugammedia

JVP
Chithra / Jun 6th 2023, 7:44 am
image

Advertisement

ஊடகங்களை தணிக்கை செய்வதற்காக அதிகாரத்தை வழங்கி, மக்களின் தகவல் அறியும் சந்தர்ப்பத்தை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஐவரே உத்தேச ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் அனைவரும்  ஜனாதிபதியின் தாளத்துக்கு ஆடும் பொம்மைகளாகவே மாறிவிடுவார்கள்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு என்ற ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு அங்கத்தவர்களை நியமித்து அந்த சுயாதீன ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்த சந்தர்ப்பம் வழங்காத ஜனாதிபதி மற்றும் அரசாங்கமே இங்கு உள்ளது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இந்த நிலைமை என்றால், அங்கத்தவர்களை நியமிப்பதற்கு நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு ஏகோபித்த அதிகாரமுள்ள உத்தேச உழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் என்ன செய்யமுடியும்?

ஊடகங்களை தணிக்கை செய்வதற்காக அதிகாரத்தை வழங்கி, மக்களின் தகவல் அறியும் சந்தர்ப்பத்தை ஒடுக்கும் இந்த முயற்சியை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்

ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு samugammedia ஊடகங்களை தணிக்கை செய்வதற்காக அதிகாரத்தை வழங்கி, மக்களின் தகவல் அறியும் சந்தர்ப்பத்தை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஐவரே உத்தேச ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் அனைவரும்  ஜனாதிபதியின் தாளத்துக்கு ஆடும் பொம்மைகளாகவே மாறிவிடுவார்கள்.சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு என்ற ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு அங்கத்தவர்களை நியமித்து அந்த சுயாதீன ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்த சந்தர்ப்பம் வழங்காத ஜனாதிபதி மற்றும் அரசாங்கமே இங்கு உள்ளது.சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இந்த நிலைமை என்றால், அங்கத்தவர்களை நியமிப்பதற்கு நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு ஏகோபித்த அதிகாரமுள்ள உத்தேச உழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் என்ன செய்யமுடியும்ஊடகங்களை தணிக்கை செய்வதற்காக அதிகாரத்தை வழங்கி, மக்களின் தகவல் அறியும் சந்தர்ப்பத்தை ஒடுக்கும் இந்த முயற்சியை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement