• May 06 2024

இனப்பிரச்சினை தீர்வுக்கான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியே- நிஷாந்தன் கருத்து!

Sharmi / Dec 12th 2022, 2:26 pm
image

Advertisement

தமிழ் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்தைக்கு அழைத்துள்ள விடயமானது மீண்டும்மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியென தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கொள்கையின் கீழ் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சீனா தொடர்பில் தமிழ் தேசிய கட்களிடையே குழப்பான நிலையே காணப்படுகின்றது.சிலர் சீனாவுக்கு ஆதரவாகவும் சிலர் இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயற்படுவதாகவும் தெரிவித்தார்..
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் சில நாட்களாக தமிழ் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து கட்சிகளையும் அழைத்திருக்கின்றார்.வடகிழக்கில் உள்ள தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளை இந்த பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்திருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த அழைப்பு என்பது வடகிழக்கு வாழ் தமிழ் மக்களை மட்டுமன்றி உலக தமிழ் மக்களையும் சர்வதே சமூகத்தினையும் மீண்டும்மீண்டும் ஏமாற்றும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதெல்லாம் இவ்வாறான அழைப்புகளையும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலான மும்முரத்தினையும் அவர் காட்டவில்லை.இன்று இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார்.அதனை தக்கவைப்பதற்காகவும் சர்வதேசத்திடமிருந்து இலங்கைக்காக பொருளாதாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் வீழ்ந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியை நிலை நிறுத்துவதற்காகவும் இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றிவருகின்றார்.இதுவொன்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு புதிய விடயமல்ல.

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கூட பல பேச்சுவார்த்தைகளை ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்திருந்தார்.அதன் விளைவாக என்ன நடந்தது என்பதை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அறிந்திருப்பார்கள்.

எவ்வாறாயினும் அழைப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.இந்த அழைப்புக்கு எவ்வாறான பதிலை வழங்கப்போகின்றோம் என்பதை தமிழ் கட்சிகள் சிந்திக்கவேண்டும்.தமிழ்தேசியம் சார்ந்த வடகிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சமஸ்டி அடிப்படையில் தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது வரவேற்கத்தக்க விடயம்.

ஆனால் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு திகதிக்கு முன்பாக தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த பேச்சுவார்த்தை என்ன பதிலை வழங்கப்போகின்றோம், என்ன அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் அமையவேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கவேண்டும்.

அதனைவிடுத்து ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக ஜனாதிபதியை சந்திப்பதோ,தனித்தனியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமாக சந்திப்பதோ இந்த பேச்சுவார்த்தையினை குழப்பும்செயலாகவே அமையும்.

இந்த நாட்டில் உள்ள அரசுகள் ஒற்றையாட்சியை எப்போதுமே கைவிடப்போவதில்லையென்பது தெட்டத்தெளிவான உண்மை.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அப்பால் பிரதான எதிர்க்கட்சிகளாகயிருக்கின்ற 13ஐ தூக்கிப்பிடித்துக்கொண்டு ஒற்றையாட்சி என்றவற்றுக்குள் இருந்தவெளியில் வருவதற்கு தயாரற்ற நிலையிலேயே உள்ளனர்.
தமிழ் தேசிய கட்சிகள் வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒன்றிணைத்து வெளிப்படையான பேச்சுகளை நடாத்தி அரசாங்கத்துடன் எவ்வாறன பேச்சுகளை முன்னெடுப்பது என்பதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்தவேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நிலைமையினை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் எமக்கு பேச்சுவார்த்தையில் ஆர்வம் இல்லையென்ற முன்னெடுப்புகளை செய்யும் நிலை உருவாகும்.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டிற்குள் அதிகளவில் ஊடுறுவிய சீனா இன்று வடகிழக்கில் பல்வேறுவிதமான ஊடுறுவிவருகின்றது.இந்த சீனாவின் ஊடுறுவல் தொடர்பில் தமிழ் கட்சிகள் தெளிவான தீர்மானத்தை எடுத்திருக்கவேண்டும்.சீனா தொடர்பில் தமிழ் தேசிய கட்களிடையே குழப்பான நிலையே காணப்படுகின்றது.சிலர் சீனாவுக்கு ஆதரவாகவும் சிலர் இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர்.

இந்தியா-சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள வடகிழக்கு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த விடயத்தினை கையாளவேண்டும்.கடந்த காலத்தில் இந்தியாவினை சரியாக கையாளாகததன் விளைவினை நாங்கள் அனுபவித்திருந்தோம்.இனிவரும் காலங்களிலாவது எதிர்கால தலைமுறையினை பாதுகாக்கவேண்டும்.

இந்தியாவையோ சீனாவையோ சரியாக கையாண்டால் எமது நிலம் பாதுகாக்கப்படும்,எமது வளம் பாதுகாக்கப்படும்,உரிமை பாதுகாக்கப்படும்.வடகிழக்கில் உள்ள வளங்களை பல நாடுகள் இன்று சுரண்டிச்செல்வதற்கு முயற்சிகளை முன்னெடுக்கின்றது. கேந்திரமுக்கியத்துவாய்ந்த பல இடங்கள் இங்கு உள்ளன.அவற்றினை பாதுகாக்கவேண்டுமானால் இந்தியாவையோ சீனாவையோ சரியாக கையாளவேண்டும்.அதனை கையாள்வதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தமிழ் தேசிய பரப்பில் உள்ள சிவில் சமூகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு அணியை உருவாக்கவேண்டும் என தெரிவித்தார்.


இனப்பிரச்சினை தீர்வுக்கான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியே- நிஷாந்தன் கருத்து தமிழ் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்தைக்கு அழைத்துள்ள விடயமானது மீண்டும்மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியென தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கொள்கையின் கீழ் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.சீனா தொடர்பில் தமிழ் தேசிய கட்களிடையே குழப்பான நிலையே காணப்படுகின்றது.சிலர் சீனாவுக்கு ஆதரவாகவும் சிலர் இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் சில நாட்களாக தமிழ் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து கட்சிகளையும் அழைத்திருக்கின்றார்.வடகிழக்கில் உள்ள தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளை இந்த பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்திருக்கின்றார்.ரணில் விக்ரமசிங்கவின் இந்த அழைப்பு என்பது வடகிழக்கு வாழ் தமிழ் மக்களை மட்டுமன்றி உலக தமிழ் மக்களையும் சர்வதே சமூகத்தினையும் மீண்டும்மீண்டும் ஏமாற்றும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதெல்லாம் இவ்வாறான அழைப்புகளையும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலான மும்முரத்தினையும் அவர் காட்டவில்லை.இன்று இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார்.அதனை தக்கவைப்பதற்காகவும் சர்வதேசத்திடமிருந்து இலங்கைக்காக பொருளாதாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் வீழ்ந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியை நிலை நிறுத்துவதற்காகவும் இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றிவருகின்றார்.இதுவொன்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு புதிய விடயமல்ல.தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கூட பல பேச்சுவார்த்தைகளை ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்திருந்தார்.அதன் விளைவாக என்ன நடந்தது என்பதை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அறிந்திருப்பார்கள்.எவ்வாறாயினும் அழைப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.இந்த அழைப்புக்கு எவ்வாறான பதிலை வழங்கப்போகின்றோம் என்பதை தமிழ் கட்சிகள் சிந்திக்கவேண்டும்.தமிழ்தேசியம் சார்ந்த வடகிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சமஸ்டி அடிப்படையில் தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது வரவேற்கத்தக்க விடயம்.ஆனால் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு திகதிக்கு முன்பாக தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த பேச்சுவார்த்தை என்ன பதிலை வழங்கப்போகின்றோம், என்ன அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் அமையவேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கவேண்டும்.அதனைவிடுத்து ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக ஜனாதிபதியை சந்திப்பதோ,தனித்தனியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமாக சந்திப்பதோ இந்த பேச்சுவார்த்தையினை குழப்பும்செயலாகவே அமையும்.இந்த நாட்டில் உள்ள அரசுகள் ஒற்றையாட்சியை எப்போதுமே கைவிடப்போவதில்லையென்பது தெட்டத்தெளிவான உண்மை.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அப்பால் பிரதான எதிர்க்கட்சிகளாகயிருக்கின்ற 13ஐ தூக்கிப்பிடித்துக்கொண்டு ஒற்றையாட்சி என்றவற்றுக்குள் இருந்தவெளியில் வருவதற்கு தயாரற்ற நிலையிலேயே உள்ளனர்.தமிழ் தேசிய கட்சிகள் வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒன்றிணைத்து வெளிப்படையான பேச்சுகளை நடாத்தி அரசாங்கத்துடன் எவ்வாறன பேச்சுகளை முன்னெடுப்பது என்பதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்தவேண்டும்.அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நிலைமையினை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் எமக்கு பேச்சுவார்த்தையில் ஆர்வம் இல்லையென்ற முன்னெடுப்புகளை செய்யும் நிலை உருவாகும்.மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டிற்குள் அதிகளவில் ஊடுறுவிய சீனா இன்று வடகிழக்கில் பல்வேறுவிதமான ஊடுறுவிவருகின்றது.இந்த சீனாவின் ஊடுறுவல் தொடர்பில் தமிழ் கட்சிகள் தெளிவான தீர்மானத்தை எடுத்திருக்கவேண்டும்.சீனா தொடர்பில் தமிழ் தேசிய கட்களிடையே குழப்பான நிலையே காணப்படுகின்றது.சிலர் சீனாவுக்கு ஆதரவாகவும் சிலர் இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர்.இந்தியா-சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள வடகிழக்கு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த விடயத்தினை கையாளவேண்டும்.கடந்த காலத்தில் இந்தியாவினை சரியாக கையாளாகததன் விளைவினை நாங்கள் அனுபவித்திருந்தோம்.இனிவரும் காலங்களிலாவது எதிர்கால தலைமுறையினை பாதுகாக்கவேண்டும்.இந்தியாவையோ சீனாவையோ சரியாக கையாண்டால் எமது நிலம் பாதுகாக்கப்படும்,எமது வளம் பாதுகாக்கப்படும்,உரிமை பாதுகாக்கப்படும்.வடகிழக்கில் உள்ள வளங்களை பல நாடுகள் இன்று சுரண்டிச்செல்வதற்கு முயற்சிகளை முன்னெடுக்கின்றது. கேந்திரமுக்கியத்துவாய்ந்த பல இடங்கள் இங்கு உள்ளன.அவற்றினை பாதுகாக்கவேண்டுமானால் இந்தியாவையோ சீனாவையோ சரியாக கையாளவேண்டும்.அதனை கையாள்வதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தமிழ் தேசிய பரப்பில் உள்ள சிவில் சமூகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு அணியை உருவாக்கவேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement