• Oct 30 2024

ஆலயத்தில் இருந்த நகைகள் மற்றும் பொற்காசுகளை திருடிய பூசாரி!samugammedia

Tamil nila / Dec 12th 2023, 9:08 pm
image

Advertisement

ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த மோதிரம் மற்றும் பொற்காசு என்பற்றை அவர் திருடியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

கொக்குவிலைச் சேர்ந்த 27 வயதுடைய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பூசாரி போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆலயத்தில் இருந்த நகைகள் மற்றும் பொற்காசுகளை திருடிய பூசாரிsamugammedia ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த மோதிரம் மற்றும் பொற்காசு என்பற்றை அவர் திருடியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.கொக்குவிலைச் சேர்ந்த 27 வயதுடைய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பூசாரி போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement