• May 18 2024

யுத்த வெற்றியைக் கொண்டு ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் ராஜபக்‌ஷக்கள்..! அனுர பகிரங்க குற்றச்சாட்டு samugammedia

Chithra / Nov 21st 2023, 8:59 am
image

Advertisement



ராஜபக்‌ஷக்கள்  யுத்தத்தை நிறைவு செய்து விட்டு ஊழல் மோசடி  செய்து நாட்டை சுத்தமாக்கியமை தொடர்பிலேயே நாம் வெறுப்படைந்துள்ளோம். எனவே  யுத்த வெற்றியைக் கொண்டு மோசடிகளை  மூடி மறைக்க வேண்டாம் என  ஜே வி.பி. தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த  சகல அரசாங்கங்களும் பொருளாதார ரீதியில் எடுத்த தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தின.

ஆனால் எந்த அரசாங்கங்களும்  நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை.

அதனால்தான்  2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பொருளாதார ரீதியில் எடுத்த தீர்மானங்கள் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு ஒரு காரணியாக  உள்ளது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் போது குற்ற ஒப்புதல் வழங்கும் கலாசாரம் தற்போது  காணப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்  என்று குறிப்பிட்டார்.

ஊழல்  மோசடியால் நாடு வங்குரோத்தடைந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். அரசாங்கத்தின் பல செயற்பாடுகளில் ஊழல் மோசடி  காணப்படுவதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. என்றார்.  

யுத்த வெற்றியைக் கொண்டு ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் ராஜபக்‌ஷக்கள். அனுர பகிரங்க குற்றச்சாட்டு samugammedia ராஜபக்‌ஷக்கள்  யுத்தத்தை நிறைவு செய்து விட்டு ஊழல் மோசடி  செய்து நாட்டை சுத்தமாக்கியமை தொடர்பிலேயே நாம் வெறுப்படைந்துள்ளோம். எனவே  யுத்த வெற்றியைக் கொண்டு மோசடிகளை  மூடி மறைக்க வேண்டாம் என  ஜே வி.பி. தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த  சகல அரசாங்கங்களும் பொருளாதார ரீதியில் எடுத்த தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தின.ஆனால் எந்த அரசாங்கங்களும்  நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை.அதனால்தான்  2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பொருளாதார ரீதியில் எடுத்த தீர்மானங்கள் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு ஒரு காரணியாக  உள்ளது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் போது குற்ற ஒப்புதல் வழங்கும் கலாசாரம் தற்போது  காணப்படுகிறது.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்  என்று குறிப்பிட்டார்.ஊழல்  மோசடியால் நாடு வங்குரோத்தடைந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். அரசாங்கத்தின் பல செயற்பாடுகளில் ஊழல் மோசடி  காணப்படுவதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. என்றார்.  

Advertisement

Advertisement

Advertisement