• Oct 18 2025

இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சனை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே! சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

shanuja / Oct 16th 2025, 5:43 pm
image

இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சனை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே என அரசியல் ஆய்வாளரும்  சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


NPP அரசாங்கம் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்று கூறி வருகிறது. இது இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சனை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே ஆகும். அவர் எழுதிய முழு விபரமும் வருமாறு 


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பாக உருவாக்கப்பட்ட 60/1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் நடைமுறைச் செயற்பாடு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகம் 63 வது கூட்டடத் தொடரில் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.


 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மனித உரிமைகள் விடயங்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய விரிவான அறிக்கையை 66 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு வழக்கம்போலவே தீர்மானத்தை முழுமையாக நிராகரித்துள்ளது. 


 இது இலங்கை மக்களை இனரீதியாக துருவமயப்படுத்தும் என்றும் கூறியுள்ளது. சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் இருப்பதையே விரும்பவில்லை. அதனுடைய கவலையெல்லாம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து இந்த விவகாரத்தை எவ்வாறு அகற்றுவது என்பதே! மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் இருக்கும் வரை சர்வதேச மட்டத்தில் அது பேசு பொருளாகவே இருக்கும்.



இந்த 60/1  தீர்மானம் பொறுப்புக் கூறலில் உள்நாட்டு பொறிமுறையினையே சிபார்சு செய்துள்ளது. அப்பொறிமுறையில் கூட ஐ.நாவின் பிடி எதுவும் இல்லாத வகையில் சுதந்திரமாக சிறீலங்கா அரசை கையாள விட்டுள்ளது. சிறீலங்கா அரசும் ஐ.நா வின் சிறிய பிடியைக் கூட நிராகரித்தே வந்தது. அரசின் வற்புறுத்தலினால் ஆரம்ப முன் மொழிவில் இருந்த மென்மையான பிடிகள்கூட முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டன.


ஆரம்ப முன் மொழிவில் சுயாதீன சிறப்பு சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்தியேக நீதித்துறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என முன்வைத்த கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது. இராணுவ மயமாக்கம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. உள்ளகப் பொறுப்புக் கூறல் தொடர்பான அழுத்தமான சொற்பதங்களும் நீக்கப்பட்டன. 


இனப்பிரச்சினை என்ற சொல் முன்னர் நீக்கப்பட்ட போதும் பின்னர் பல்வேறு விமர்சனங்கள் காரணமாக இன மோதல் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளக பொறிமுறையில் அனைத்து பிடிகளும் நீக்கப்பட்டு உத்தியோகபூர்வமற்ற மறைமுக கண்காணிப்புக்கு மட்டும் வழி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய மென் அழுத்தத்தை மட்டும் பிரயோகிக்க முற்படுகின்றது.


உள்ளக பொறுப்புக் கூறலில் பிடிகள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட சர்வதேச பொறுப்புக் கூறலை முழுமையாகக் கைவிட்டது என்றும் கூறிவிட முடியாது. சாட்சியங்கள் சேகரிப்பு தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள்  சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக வைத்து தங்கள் நாடுகளில் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 


சிறீலங்கா தொடர் கண்காணிப்பில் இருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொறுப்புக் கூறல் விடயத்தில் தமிழ் மக்கள் மன ஆறுதல்களை பெற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள் இவை மட்டும்தான்.நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்பதே அறிக்கையின் தலைப்பு. 


நல்லிணக்கம் முதலில் வருவதால் பொறுப்புக் கூறலை விட நல்லிணக்கத்தையே முதன்மைப்படுத்துவது போல தோற்றம் தெரிகின்றது. ஆனால் இத்தனைக்கும் சர்வதேசரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற விவாதம் பொறுப்புக் கூறல் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதே.


நல்லிணக்கம் தொடர்பாக இரண்டு விடயங்கள் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று அதிகார பகிர்வு சார்ந்த கடப்பாட்டை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இரண்டாவது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தி வடக்கு - கிழக்கு மாகாணம் உட்பட அனைத்து மாகாணங்களின் செயல் திறன்மிக்க இயங்குகையை உறுதி செய்ய வேண்டும்.


 அதிகாரப் பகிர்வு பற்றி மேலோட்டமாகவே கூறப்பட்டுள்ளது. எத்தகைய அதிகார பகிர்வு? ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வா? சமஸ்டியாட்சிக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வா? என்பது பற்றி எதுவும் கூறவில்லை. இது விடயத்தில் சிறீலங்கா அரசுடன் சர்ச்சைகளுக்கு போக விரும்பவில்லை என்பதையே இது வெளிக்காட்டியுள்ளது.


சிறீலங்காவில் இரண்டு முகங்கள் இருக்கின்றன. பெருந்தேசிய வாதத்தின் லிபரல் முகம், பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகம் என்பவையே அவ்விரண்டுமாகும். இதில் லிபரல் முகம் அதிகாரப்பகிர்வு தொடர்பாக செல்லக்கூடிய எல்லை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வு மட்டும் தான். 


சிங்கள தேசத்தில் உள்ள சிறிய இடது சாரி குழுக்கள் தவிர்ந்த ஏனையவை எவையும் சமஸ்டி பற்றி உச்சரிக்கவே தயாராக இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு இவ்வாறான லிபரல் முகம் கூட கிடையாது. அதன் வரலாறு என்பது முழுக்க முழுக்க பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகமாகும். இதனால் தான் இனப்பிரச்சினை என்ற சொல்லைக் கூட சகித்துக் கொள்ள அது தயக்கம் காட்டுகின்றது. 



இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சனை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சனை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே என அரசியல் ஆய்வாளரும்  சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.NPP அரசாங்கம் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்று கூறி வருகிறது. இது இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சனை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே ஆகும். அவர் எழுதிய முழு விபரமும் வருமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பாக உருவாக்கப்பட்ட 60/1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் நடைமுறைச் செயற்பாடு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகம் 63 வது கூட்டடத் தொடரில் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மனித உரிமைகள் விடயங்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய விரிவான அறிக்கையை 66 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சிறீலங்கா அரசு வழக்கம்போலவே தீர்மானத்தை முழுமையாக நிராகரித்துள்ளது.  இது இலங்கை மக்களை இனரீதியாக துருவமயப்படுத்தும் என்றும் கூறியுள்ளது. சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் இருப்பதையே விரும்பவில்லை. அதனுடைய கவலையெல்லாம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து இந்த விவகாரத்தை எவ்வாறு அகற்றுவது என்பதே மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் இருக்கும் வரை சர்வதேச மட்டத்தில் அது பேசு பொருளாகவே இருக்கும்.இந்த 60/1  தீர்மானம் பொறுப்புக் கூறலில் உள்நாட்டு பொறிமுறையினையே சிபார்சு செய்துள்ளது. அப்பொறிமுறையில் கூட ஐ.நாவின் பிடி எதுவும் இல்லாத வகையில் சுதந்திரமாக சிறீலங்கா அரசை கையாள விட்டுள்ளது. சிறீலங்கா அரசும் ஐ.நா வின் சிறிய பிடியைக் கூட நிராகரித்தே வந்தது. அரசின் வற்புறுத்தலினால் ஆரம்ப முன் மொழிவில் இருந்த மென்மையான பிடிகள்கூட முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டன.ஆரம்ப முன் மொழிவில் சுயாதீன சிறப்பு சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்தியேக நீதித்துறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என முன்வைத்த கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது. இராணுவ மயமாக்கம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. உள்ளகப் பொறுப்புக் கூறல் தொடர்பான அழுத்தமான சொற்பதங்களும் நீக்கப்பட்டன. இனப்பிரச்சினை என்ற சொல் முன்னர் நீக்கப்பட்ட போதும் பின்னர் பல்வேறு விமர்சனங்கள் காரணமாக இன மோதல் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளக பொறிமுறையில் அனைத்து பிடிகளும் நீக்கப்பட்டு உத்தியோகபூர்வமற்ற மறைமுக கண்காணிப்புக்கு மட்டும் வழி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய மென் அழுத்தத்தை மட்டும் பிரயோகிக்க முற்படுகின்றது.உள்ளக பொறுப்புக் கூறலில் பிடிகள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட சர்வதேச பொறுப்புக் கூறலை முழுமையாகக் கைவிட்டது என்றும் கூறிவிட முடியாது. சாட்சியங்கள் சேகரிப்பு தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள்  சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக வைத்து தங்கள் நாடுகளில் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறீலங்கா தொடர் கண்காணிப்பில் இருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொறுப்புக் கூறல் விடயத்தில் தமிழ் மக்கள் மன ஆறுதல்களை பெற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள் இவை மட்டும்தான்.நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்பதே அறிக்கையின் தலைப்பு. நல்லிணக்கம் முதலில் வருவதால் பொறுப்புக் கூறலை விட நல்லிணக்கத்தையே முதன்மைப்படுத்துவது போல தோற்றம் தெரிகின்றது. ஆனால் இத்தனைக்கும் சர்வதேசரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற விவாதம் பொறுப்புக் கூறல் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதே.நல்லிணக்கம் தொடர்பாக இரண்டு விடயங்கள் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று அதிகார பகிர்வு சார்ந்த கடப்பாட்டை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இரண்டாவது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தி வடக்கு - கிழக்கு மாகாணம் உட்பட அனைத்து மாகாணங்களின் செயல் திறன்மிக்க இயங்குகையை உறுதி செய்ய வேண்டும். அதிகாரப் பகிர்வு பற்றி மேலோட்டமாகவே கூறப்பட்டுள்ளது. எத்தகைய அதிகார பகிர்வு ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வா சமஸ்டியாட்சிக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வா என்பது பற்றி எதுவும் கூறவில்லை. இது விடயத்தில் சிறீலங்கா அரசுடன் சர்ச்சைகளுக்கு போக விரும்பவில்லை என்பதையே இது வெளிக்காட்டியுள்ளது.சிறீலங்காவில் இரண்டு முகங்கள் இருக்கின்றன. பெருந்தேசிய வாதத்தின் லிபரல் முகம், பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகம் என்பவையே அவ்விரண்டுமாகும். இதில் லிபரல் முகம் அதிகாரப்பகிர்வு தொடர்பாக செல்லக்கூடிய எல்லை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வு மட்டும் தான். சிங்கள தேசத்தில் உள்ள சிறிய இடது சாரி குழுக்கள் தவிர்ந்த ஏனையவை எவையும் சமஸ்டி பற்றி உச்சரிக்கவே தயாராக இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு இவ்வாறான லிபரல் முகம் கூட கிடையாது. அதன் வரலாறு என்பது முழுக்க முழுக்க பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகமாகும். இதனால் தான் இனப்பிரச்சினை என்ற சொல்லைக் கூட சகித்துக் கொள்ள அது தயக்கம் காட்டுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement