• May 18 2024

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர்! கோமகன் ஆதங்கம்

Chithra / Jan 16th 2023, 5:56 pm
image

Advertisement

தமிழ் அரசியல் கைதிகள் பொங்கலுக்கு விடுதலை செய்யப்படுவார்கள் என்ற ஏக்கத்துடன் அவர்களின் குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால் விடுதலை செய்யப்படாது நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். எமது நிலங்கள் இராணுவத்தின் கையகப்படுத்தலுக்குள் காணப்படுவதனால் எமது மக்கள் தொடர்ந்தும் அகதிமுகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர் என குரலற்றோரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

தேசிய பொங்கல் தினம் நேற்றையதினம் யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், போராட்டகாரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகங்கள் மூலமாக போராட்டகாரர்களை முன்னேறவிடாது தடுத்தனர்.

இந்நிலையில் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த குரலற்றோரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன்,

நாட்டின் ஜனாதிபதி இன்று எங்களுடைய மண்ணில் தேசிய  பொங்கல் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார். எங்களுடைய உறவுகளும் நாங்களும் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றோம். 

தமிழ் அரசியல் கைதிகள் பொங்கலுக்கு விடுதலை செய்யப்படுவார்கள் என்ற ஏக்கத்துடன் அவர்களின் குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால் விடுதலை செய்யப்படாது நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். 

எங்களுடைய பல குடும்பங்கள் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோரின்  குடும்பங்களில் பொங்கல் பொங்கப்படவில்லை. 

அதேபோல்  எமது நிலங்கள் இராணுவத்தின் கையகப்படுத்தலுக்குள் காணப்படுவதனால் எமது மக்கள் தொடர்ந்தும் அகதிமுகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர்.

தமிழ்மக்களுடன் நல்லிணக்கத்துடன் இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திடம் காட்டி, பொருளாதார ரீதியாக மீள்வதற்குரிய நிதியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெறுவதற்கான சூட்சுமமான வழிமுறையாகவே இதனைப் பார்க்கின்றோம். 

எங்களுக்குரிய தீர்வு எமக்குக் கிடைக்கப்பெறுவதுடன், எமது கண்ணீருக்கான தீர்வும் கிடைக்கப்பெறும் தருணமே, இந்த மண்ணில் நாம் எந்தச் செயற்பாட்டையும் உரிமையுடன் மேற்கொள்ள முடியும்.- என்றார்

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர் கோமகன் ஆதங்கம் தமிழ் அரசியல் கைதிகள் பொங்கலுக்கு விடுதலை செய்யப்படுவார்கள் என்ற ஏக்கத்துடன் அவர்களின் குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால் விடுதலை செய்யப்படாது நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். எமது நிலங்கள் இராணுவத்தின் கையகப்படுத்தலுக்குள் காணப்படுவதனால் எமது மக்கள் தொடர்ந்தும் அகதிமுகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர் என குரலற்றோரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.தேசிய பொங்கல் தினம் நேற்றையதினம் யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், போராட்டகாரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகங்கள் மூலமாக போராட்டகாரர்களை முன்னேறவிடாது தடுத்தனர்.இந்நிலையில் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த குரலற்றோரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன்,நாட்டின் ஜனாதிபதி இன்று எங்களுடைய மண்ணில் தேசிய  பொங்கல் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார். எங்களுடைய உறவுகளும் நாங்களும் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் அரசியல் கைதிகள் பொங்கலுக்கு விடுதலை செய்யப்படுவார்கள் என்ற ஏக்கத்துடன் அவர்களின் குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால் விடுதலை செய்யப்படாது நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய பல குடும்பங்கள் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோரின்  குடும்பங்களில் பொங்கல் பொங்கப்படவில்லை. அதேபோல்  எமது நிலங்கள் இராணுவத்தின் கையகப்படுத்தலுக்குள் காணப்படுவதனால் எமது மக்கள் தொடர்ந்தும் அகதிமுகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர்.தமிழ்மக்களுடன் நல்லிணக்கத்துடன் இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திடம் காட்டி, பொருளாதார ரீதியாக மீள்வதற்குரிய நிதியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெறுவதற்கான சூட்சுமமான வழிமுறையாகவே இதனைப் பார்க்கின்றோம். எங்களுக்குரிய தீர்வு எமக்குக் கிடைக்கப்பெறுவதுடன், எமது கண்ணீருக்கான தீர்வும் கிடைக்கப்பெறும் தருணமே, இந்த மண்ணில் நாம் எந்தச் செயற்பாட்டையும் உரிமையுடன் மேற்கொள்ள முடியும்.- என்றார்

Advertisement

Advertisement

Advertisement