• May 05 2024

டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் 280 ஆக குறையும்! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Chithra / Apr 11th 2024, 7:47 am
image

Advertisement

 

ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் 280 ஆக குறையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற  நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த சிரமங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அனைவரும் தற்போது சற்று தளர்வாக வாழ்க்கையை கழித்து வருகின்றோம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் அவ்வாறான நிலைமை ஒன்று காணப்படவில்லை.

அனைவரும் துன்பங்களை அனுபவித்தோம். பணிக்கு செல்ல முடியவில்லை. உணவு பெற்றுக் கொள்ள முடியவில்லை.

மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போனது பாடசாலைகள் மூடப்பட்டது. அதிகமான துன்பங்களை நீங்களே அனுபவித்தீர்கள்.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள், பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்த மக்கள், விவசாயிகள் போன்றோர் கடும் நெருக்கடியின் போதும் அதனை பொறுத்துக் கொண்டனர். 

அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.  

நாட்டை ஏற்கும் போது கடுமையான சிக்கலுக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என நான் நினைத்தேன்.

அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தோம். வற் வரி அதிகரித்தோம். அந்த வரியை நீங்களே சுமந்தீர்கள். அதனை சுமந்தமையினால் நாடு நிலையான நிலைக்குள்ளாகியுள்ளது.

தற்போது கடன் பெறுவதில்லை. டொலர் பெறுமதி குறைந்துள்ளது. மேலும் குறையும் என அவர்  தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் 280 ஆக குறையும் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்  ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் 280 ஆக குறையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில்  நடைபெற்ற  நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த சிரமங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.நாங்கள் அனைவரும் தற்போது சற்று தளர்வாக வாழ்க்கையை கழித்து வருகின்றோம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் அவ்வாறான நிலைமை ஒன்று காணப்படவில்லை.அனைவரும் துன்பங்களை அனுபவித்தோம். பணிக்கு செல்ல முடியவில்லை. உணவு பெற்றுக் கொள்ள முடியவில்லை.மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போனது பாடசாலைகள் மூடப்பட்டது. அதிகமான துன்பங்களை நீங்களே அனுபவித்தீர்கள்.குறைந்த வருமானம் கொண்ட மக்கள், பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்த மக்கள், விவசாயிகள் போன்றோர் கடும் நெருக்கடியின் போதும் அதனை பொறுத்துக் கொண்டனர். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.  நாட்டை ஏற்கும் போது கடுமையான சிக்கலுக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என நான் நினைத்தேன்.அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தோம். வற் வரி அதிகரித்தோம். அந்த வரியை நீங்களே சுமந்தீர்கள். அதனை சுமந்தமையினால் நாடு நிலையான நிலைக்குள்ளாகியுள்ளது.தற்போது கடன் பெறுவதில்லை. டொலர் பெறுமதி குறைந்துள்ளது. மேலும் குறையும் என அவர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement