• May 05 2024

சத்தமாக ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைத்த பெண்...! ஷாக்கான நெட்டிசன்கள்..!samugammedia

Sharmi / Aug 8th 2023, 11:02 am
image

Advertisement

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரின் கிம்பர்லி வின்ட்டர் என்பவர் மிக உரக்க ஏப்பம் விட்டு கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இத்தாலியின் எலிசா கெக்னொனி 2009இல் அத்தகைய சாதனையைப் படைத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது கிம்பர்லி அதிக சத்தத்துடன், அதாவது ஒரு மோட்டார் சைக்கிள் சத்தத்தை விட அதிகமான சத்தத்துடன் ஏப்பம் விட்டு அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

சாதனை செய்யத் தயாராவதற்கு முன், காலை உணவுக்குப் பின் கோப்பியும் பீரும் அருந்தினார் கிம்பர்லி. சத்தமாக ஏப்பம் விடும் தன்மையைச் சிறு வயதிலிருந்தே கண்டறிந்ததாகவும் வயது ஆக ஆக சத்தம் அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.



பொது இடங்களில் கிம்பர்லி ஏப்பம் விடுவது சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். ஆனால், ஏப்பம் விடும் வீடியோக்களை டிக்டொக், பேஸ்புக் ஆகிய சமூக தளங்களில் பதிவேற்றிய அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.


கிம்பர்லி கின்னஸ் உலக சாதனை படைக்க ஊக்கமளித்ததே தனது ரசிகர்கள் என்கிறார்.


சத்தமாக ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைத்த பெண். ஷாக்கான நெட்டிசன்கள்.samugammedia அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரின் கிம்பர்லி வின்ட்டர் என்பவர் மிக உரக்க ஏப்பம் விட்டு கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இத்தாலியின் எலிசா கெக்னொனி 2009இல் அத்தகைய சாதனையைப் படைத்திருந்தார். இந்நிலையில், தற்போது கிம்பர்லி அதிக சத்தத்துடன், அதாவது ஒரு மோட்டார் சைக்கிள் சத்தத்தை விட அதிகமான சத்தத்துடன் ஏப்பம் விட்டு அந்த சாதனையை முறியடித்துள்ளார். சாதனை செய்யத் தயாராவதற்கு முன், காலை உணவுக்குப் பின் கோப்பியும் பீரும் அருந்தினார் கிம்பர்லி. சத்தமாக ஏப்பம் விடும் தன்மையைச் சிறு வயதிலிருந்தே கண்டறிந்ததாகவும் வயது ஆக ஆக சத்தம் அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.பொது இடங்களில் கிம்பர்லி ஏப்பம் விடுவது சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். ஆனால், ஏப்பம் விடும் வீடியோக்களை டிக்டொக், பேஸ்புக் ஆகிய சமூக தளங்களில் பதிவேற்றிய அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. கிம்பர்லி கின்னஸ் உலக சாதனை படைக்க ஊக்கமளித்ததே தனது ரசிகர்கள் என்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement