• Nov 25 2024

முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பும் பணி நிறைவு..!

Sharmi / Sep 20th 2024, 12:45 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுக்களை அனுப்பும் பணி நிறைவடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று(20) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் , மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

நாளையதினம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான மிக முக்கிய ஏற்பாடான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுக்களை அனுப்பும் பணி இன்று நிறைவடைந்திருக்கின்றது.

இன்று(20) காலை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து 137 வாக்களிப்பு நிலையங்களிற்கு அதற்கு பொறுப்பாக இருக்கும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களினுடைய தலைமையினிலே வாக்குப் பெட்டிகளும், வாக்கு சீட்டுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கும் பணியிலே 138 வலயங்களாக நாம் பிரித்திருக்கின்றோம்.

138 வலயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். 

அந்த வகையிலே மிக முக்கியமாக எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் காட்டு யானைகளின் தொல்லைகள் இருப்பதனால் அதை எதிர்கொள்ளக்கூடிய விடயங்களையும் நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம்.

இந்த பணியிலே குறிப்பாக கிராம அலுவலகர்கள் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் பொறுப்பாக இருக்கும் பிரதேச செயலாளர்கள் இந்ந விடயத்தை கவனிக்க இருக்கின்றார்கள் என மேலும் தெரிவித்தார் 

குறித்த தேர்தலில் 1,506 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பும் பணி நிறைவு. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுக்களை அனுப்பும் பணி நிறைவடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று(20) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் , மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.குறித்த ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.நாளையதினம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான மிக முக்கிய ஏற்பாடான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுக்களை அனுப்பும் பணி இன்று நிறைவடைந்திருக்கின்றது.இன்று(20) காலை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து 137 வாக்களிப்பு நிலையங்களிற்கு அதற்கு பொறுப்பாக இருக்கும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களினுடைய தலைமையினிலே வாக்குப் பெட்டிகளும், வாக்கு சீட்டுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கும் பணியிலே 138 வலயங்களாக நாம் பிரித்திருக்கின்றோம்.138 வலயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையிலே மிக முக்கியமாக எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் காட்டு யானைகளின் தொல்லைகள் இருப்பதனால் அதை எதிர்கொள்ளக்கூடிய விடயங்களையும் நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம்.இந்த பணியிலே குறிப்பாக கிராம அலுவலகர்கள் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் பொறுப்பாக இருக்கும் பிரதேச செயலாளர்கள் இந்ந விடயத்தை கவனிக்க இருக்கின்றார்கள் என மேலும் தெரிவித்தார் குறித்த தேர்தலில் 1,506 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement