• May 04 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை..! - - ஜனாதிபதி சுட்டிக்காட்டு

Chithra / Apr 8th 2024, 8:51 am
image

Advertisement


ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தி ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பினார்.

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதற்கு இடமளிக்காமல் இருந்திருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலமான கட்சியாக முன்னேறியிருக்கும்.

அத்துடன், அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன், நாட்டின் கட்சி அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும்  ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாது எனவும் இன்றைய காலத்தின் உண்மையான தேவை நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது தான் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை. - - ஜனாதிபதி சுட்டிக்காட்டு ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தி ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பினார்.ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதற்கு இடமளிக்காமல் இருந்திருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலமான கட்சியாக முன்னேறியிருக்கும்.அத்துடன், அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன், நாட்டின் கட்சி அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.தாம் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும்  தெரிவித்துள்ளார்.மேலும்  ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாது எனவும் இன்றைய காலத்தின் உண்மையான தேவை நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது தான் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement