• May 05 2024

சித்திரை புத்தாண்டுக்கு பின் அரை சொகுசு பஸ்கள் இல்லை! – வெளியான அறிவிப்பு SamugamMedia

Bus
Chithra / Mar 18th 2023, 10:47 am
image

Advertisement

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் அரை சொகுசு பேருந்து சேவைகள் இரத்து செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாதாரண கட்டணத்தில் இயங்கும் பேருந்தகளுக்கும் அரை சொகுசு பேருந்துகளுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.

அரை சொகுசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். 

எனினும் அரை சொகுசு வகைகளின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகள், பேருந்தில் உள்ள இருக்கைகளை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலித்து பயணிகளை ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பயணிகளுக்கு பயனளிக்காத அரை சொகுசு சேவையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், தற்போது அரை சொகுசுப் பேருந்துகளாக இயங்கும் பேருந்துகளை குளிரூட்டப்பட்ட பேருந்துகளாக அல்லது வழக்கமான சேவைகளாக மாற்றுமாறு, பேருந்து சங்கங்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சித்திரை புத்தாண்டுக்கு பின் அரை சொகுசு பஸ்கள் இல்லை – வெளியான அறிவிப்பு SamugamMedia எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் அரை சொகுசு பேருந்து சேவைகள் இரத்து செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சாதாரண கட்டணத்தில் இயங்கும் பேருந்தகளுக்கும் அரை சொகுசு பேருந்துகளுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.அரை சொகுசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். எனினும் அரை சொகுசு வகைகளின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகள், பேருந்தில் உள்ள இருக்கைகளை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலித்து பயணிகளை ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பயணிகளுக்கு பயனளிக்காத அரை சொகுசு சேவையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.அத்துடன், தற்போது அரை சொகுசுப் பேருந்துகளாக இயங்கும் பேருந்துகளை குளிரூட்டப்பட்ட பேருந்துகளாக அல்லது வழக்கமான சேவைகளாக மாற்றுமாறு, பேருந்து சங்கங்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement