நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வின்மை தொடர்ந்தும் நீடித்து வருவதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
குறுகிய நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் இரண்டு இன சமூகங்களிலும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இந்த குறுகிய எண்ணம் கொண்டவர்களினால் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த தரப்பினர் நாட்டுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்த போதிலும் தற்பொழுது நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களது நிலைப்பாட்டை முற்று முழுதாக நிராகரிக்காது அவர்களது கருத்துக்களுக்கு செவிமடுக்க வேண்டுமென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சிங்கள - தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வின்மை நீடிக்கின்றது கரு ஜயசூரிய தெரிவிப்பு நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வின்மை தொடர்ந்தும் நீடித்து வருவதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.குறுகிய நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் இரண்டு இன சமூகங்களிலும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இந்த குறுகிய எண்ணம் கொண்டவர்களினால் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த தரப்பினர் நாட்டுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்த போதிலும் தற்பொழுது நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.அவர்களது நிலைப்பாட்டை முற்று முழுதாக நிராகரிக்காது அவர்களது கருத்துக்களுக்கு செவிமடுக்க வேண்டுமென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.