இது வெறும் ஆரம்பம். உண்மையான தலைமையின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் மீட்டெடுக்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்தார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து, எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது.
சிலர் பொய்யான வாக்குறுதிகளை நம்பியிருந்தாலும், மக்களை முதன்மைப்படுத்தும் நேர்மையான, கொள்கை ரீதியான அரசியலுக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. இது வெறும் ஆரம்பம். உண்மையான தலைமையின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் மீட்டெடுக்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.
'இது வெறும் ஆரம்பம்தான்'; மீண்டும் களமிறங்குவோம் நாமலின் அதிரடிப் பதிவு இது வெறும் ஆரம்பம். உண்மையான தலைமையின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் மீட்டெடுக்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்தார். குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து, எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது. சிலர் பொய்யான வாக்குறுதிகளை நம்பியிருந்தாலும், மக்களை முதன்மைப்படுத்தும் நேர்மையான, கொள்கை ரீதியான அரசியலுக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. இது வெறும் ஆரம்பம். உண்மையான தலைமையின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் மீட்டெடுக்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.