• Nov 25 2024

ரயில்வே துறையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - விலகும் அதிகாரிகள்

Chithra / Oct 22nd 2024, 10:31 am
image


ரயில்வே பாதுகாப்பு துறையின் மொத்த ஊழியர்களில் 75 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் ரயில்வே துறையின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு தலைமை அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே பாதுகாப்பு சேவையில் 719 பேர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 400-க்கும் குறைவான பாதுகாப்பு அதிகாரிகளே உள்ளனர்.

பல ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு இல்லாததால், ரயில்வே துறைக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

இதனால் ரயில் பயணங்களின் போது கொள்ளை, பயணிகளின் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போதிய பாதுகாப்பை ஏற்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். 

ரயில்வே துறையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - விலகும் அதிகாரிகள் ரயில்வே பாதுகாப்பு துறையின் மொத்த ஊழியர்களில் 75 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் ரயில்வே துறையின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.ஐநூறுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு தலைமை அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ரயில்வே பாதுகாப்பு சேவையில் 719 பேர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 400-க்கும் குறைவான பாதுகாப்பு அதிகாரிகளே உள்ளனர்.பல ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு இல்லாததால், ரயில்வே துறைக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.இதனால் ரயில் பயணங்களின் போது கொள்ளை, பயணிகளின் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.போதிய பாதுகாப்பை ஏற்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement