• Dec 04 2024

வவுனியாவில் மூன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு.!

Chithra / May 23rd 2024, 11:23 am
image

 

வெசாக்  பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நடாளாவிய ரீதியில் 10 பெண் கைதிகள் உட்பட 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

அதனடிப்படையில் சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்ற குற்றங்களுக்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.  

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் கே.ஏ.எஸ். அபயரட்ண மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை விடுதலை செய்து வழியனுப்பி வைத்தனர்.


வவுனியாவில் மூன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு.  வெசாக்  பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நடாளாவிய ரீதியில் 10 பெண் கைதிகள் உட்பட 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்ற குற்றங்களுக்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.  வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் கே.ஏ.எஸ். அபயரட்ண மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை விடுதலை செய்து வழியனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement