• May 05 2024

நாளாந்தம் 110 இலங்கையர்களை பலியெடுக்கும் புகையிலை, மது..!

Chithra / Dec 27th 2022, 11:24 am
image

Advertisement


புகையிலை மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு 110 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

புகைபிடித்தல் மற்றும் புகையிலை பாவனையால் வருடாந்தம் 40,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்த அவர், இதனால் இறப்பவர்களின் மனைவிகள், பெற்றோர்கள், பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


2020 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட புகையிலை வரிச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தினால், இறப்பு எண்ணிக்கையை குறைத்து, அரசாங்கத்திற்கு தேவையான 11 பில்லியன் ரூபாவை சம்பாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார் .


நாளாந்தம் 110 இலங்கையர்களை பலியெடுக்கும் புகையிலை, மது. புகையிலை மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு 110 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்புகைபிடித்தல் மற்றும் புகையிலை பாவனையால் வருடாந்தம் 40,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்த அவர், இதனால் இறப்பவர்களின் மனைவிகள், பெற்றோர்கள், பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.2020 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட புகையிலை வரிச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தினால், இறப்பு எண்ணிக்கையை குறைத்து, அரசாங்கத்திற்கு தேவையான 11 பில்லியன் ரூபாவை சம்பாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார் .

Advertisement

Advertisement

Advertisement