• Sep 07 2025

நுவரெலியா சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்; இரவில் பயணிக்க வேண்டாம் - பொலிஸார் விசேட அறிவுறுத்தல்!

shanuja / Sep 7th 2025, 6:06 pm
image

நுவரெலியாவின் சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இரவில் பயணங்களை மேற்கொள்ள  வேண்டாம் என்று பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். 


தொடர் விடுமுறையால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக நுவரெலியாவுக்கு சென்றுள்ளனர். 


இவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் கிரகரிவாவியிலும் அதன் கரையோரத்திலும் சாகசங்கள் மற்றும் குதூகலம் நிறைந்த ஏராளமான விடயங்களை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.


விடுமுறை நாட்களில் நுவரெலியா நகருக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இவ்வாறு செல்வோர் காலை முதல் மாலை வரை பொழுதுகளை கழித்து இரவில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணங்களை  மேற்கொள்கின்றனர். இதனால் இரவில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.


குறிப்பாக நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி நுவரெலியா - ஹட்டன் போன்ற பிரதான வீதிகளில் செங்குத்தான வளைவுகள் மற்றும் அதிக பள்ளங்களையும் கொண்டுள்ளது. இதனால் அதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.

 

எனவே நுவரெலியாவிற்கு சுற்றுலா வரும் புதிய சாரதிகள் வீதிகளின் நிலையறிந்து அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என நுவரெலியா பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

நுவரெலியா சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்; இரவில் பயணிக்க வேண்டாம் - பொலிஸார் விசேட அறிவுறுத்தல் நுவரெலியாவின் சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இரவில் பயணங்களை மேற்கொள்ள  வேண்டாம் என்று பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். தொடர் விடுமுறையால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக நுவரெலியாவுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் கிரகரிவாவியிலும் அதன் கரையோரத்திலும் சாகசங்கள் மற்றும் குதூகலம் நிறைந்த ஏராளமான விடயங்களை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.விடுமுறை நாட்களில் நுவரெலியா நகருக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இவ்வாறு செல்வோர் காலை முதல் மாலை வரை பொழுதுகளை கழித்து இரவில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணங்களை  மேற்கொள்கின்றனர். இதனால் இரவில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி நுவரெலியா - ஹட்டன் போன்ற பிரதான வீதிகளில் செங்குத்தான வளைவுகள் மற்றும் அதிக பள்ளங்களையும் கொண்டுள்ளது. இதனால் அதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே நுவரெலியாவிற்கு சுற்றுலா வரும் புதிய சாரதிகள் வீதிகளின் நிலையறிந்து அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என நுவரெலியா பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement