திருமலையில் இலஞ்சம் வாங்க முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்றையதினம்(17) இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 15 ஆம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவரை கடமை நேரத்தில் பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக 10,000 ரூபாய் தருமாறு கேட்டிருந்தார்
இந்நிலையில் குறித்த நபரும் உடனடியாக 5000 ரூபாவை பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து விட்டு மீதி தொகையினை நேற்றையதினம்(17) மாலை 7.20 க்கு கொடுக்கும் போது இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருகோணமலை பகுதியிலுள்ள பொலிஸ் நிலைய மொன்றில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலஞ்சம் வாங்க முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது. திருமலையில் இலஞ்சம் வாங்க முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்றையதினம்(17) இடம்பெற்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 15 ஆம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவரை கடமை நேரத்தில் பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக 10,000 ரூபாய் தருமாறு கேட்டிருந்தார் இந்நிலையில் குறித்த நபரும் உடனடியாக 5000 ரூபாவை பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து விட்டு மீதி தொகையினை நேற்றையதினம்(17) மாலை 7.20 க்கு கொடுக்கும் போது இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.திருகோணமலை பகுதியிலுள்ள பொலிஸ் நிலைய மொன்றில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.