• Feb 07 2025

பராசூட் சாகசத்தின் போது விபரீதம்- இரு இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை

Sharmi / Aug 3rd 2024, 9:56 pm
image

படையினர் நடத்திய பராசூட் சாகசத்தின் போது இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் இன்று(03)  இடம்பெற்றது.

கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வௌியேறும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் படையினரின் பராசூட் சாகச நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, ஒரு பராசூட் தரையிறங்கும் பகுதிக்கு அப்பால் சென்று மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்ததுடன், மற்றுமொரு பராசூட் வேகமாக தரையில் விழுந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த இரண்டு பராசூட் வீரர்களும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பராசூட் சாகசத்தின் போது விபரீதம்- இரு இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை படையினர் நடத்திய பராசூட் சாகசத்தின் போது இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் இன்று(03)  இடம்பெற்றது.கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வௌியேறும் நிகழ்வு இன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் படையினரின் பராசூட் சாகச நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது, ஒரு பராசூட் தரையிறங்கும் பகுதிக்கு அப்பால் சென்று மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்ததுடன், மற்றுமொரு பராசூட் வேகமாக தரையில் விழுந்துள்ளது.இவ்விபத்தில் காயமடைந்த இரண்டு பராசூட் வீரர்களும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement