• Oct 30 2024

ரயில் சேவைகள் ரத்து! - வெளியான விசேட அறிவித்தல்

Chithra / Dec 25th 2022, 2:06 pm
image

Advertisement

கனமழை காரணமாக மலையக ரயில் பாதையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று (25) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர தபால் ரயில்களும், கோட்டையிலிருந்து காலை 9:45 மணிக்கு பதுளை நோக்கிச் செல்லும் ரயில் உட்பட பல ரயில்களும் மண்சரிவு காரணமாக இன்று (25) இரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, காலை 10:40க்கு கோட்டையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் புகையிரதமும், நள்ளிரவு 12:40 மணிக்கு ஹட்டனுக்குச் செல்லும் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் உலப்பனை, பிரிமத்தலாவ, கெலிஓயா, கம்பளை, பலான, பேராதனை மஹையாவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அநுராதபுரத்திலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் ரஜரட்ட ரஜின புகையிரதம் கணேவத்த மற்றும் நாகொல்லாகம புகையிரதப் பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரயில் சேவைகள் ரத்து - வெளியான விசேட அறிவித்தல் கனமழை காரணமாக மலையக ரயில் பாதையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று (25) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர தபால் ரயில்களும், கோட்டையிலிருந்து காலை 9:45 மணிக்கு பதுளை நோக்கிச் செல்லும் ரயில் உட்பட பல ரயில்களும் மண்சரிவு காரணமாக இன்று (25) இரத்து செய்யப்பட்டுள்ளன.இது தவிர, காலை 10:40க்கு கோட்டையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் புகையிரதமும், நள்ளிரவு 12:40 மணிக்கு ஹட்டனுக்குச் செல்லும் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கடும் மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் உலப்பனை, பிரிமத்தலாவ, கெலிஓயா, கம்பளை, பலான, பேராதனை மஹையாவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, அநுராதபுரத்திலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் ரஜரட்ட ரஜின புகையிரதம் கணேவத்த மற்றும் நாகொல்லாகம புகையிரதப் பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement