• Nov 24 2024

வடக்கிற்கான ரயில் சேவைகள் நிறுத்தம்...! வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Dec 27th 2023, 9:15 am
image

 

வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டார்.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  கிறிஸ்மஸ் பண்டிகை நீண்ட விடுமுறையில் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.


இந்த போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் கூறியுள்ளார்.

இதனிடையே, இன்று(27) காலை 7.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு விசேட ரயில் சேவையும் நாளை(28) காலை 7.45 க்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட ரயில் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கிற்கான ரயில் சேவைகள் நிறுத்தம். வெளியான விசேட அறிவிப்பு  வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டார்.இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை  கிறிஸ்மஸ் பண்டிகை நீண்ட விடுமுறையில் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இந்த போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் கூறியுள்ளார்.இதனிடையே, இன்று(27) காலை 7.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு விசேட ரயில் சேவையும் நாளை(28) காலை 7.45 க்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட ரயில் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement