• May 18 2024

ஒரே நேரத்தில் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்! - அமெரிக்காவில் சுவாரஸ்யம்

Chithra / Jan 7th 2023, 8:44 am
image

Advertisement

ஒரு அமெரிக்கப் பெண் டெக்சாஸில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

ஆனால் அவை தனித்தனி ஆண்டுகளில் பிறந்தன என்று தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. 

காளி ஜோ ஸ்காட் தனது முதல் பெண் குழந்தையான அன்னி ஜோவை டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 11:55 மணிக்கு பெற்றெடுத்தார்.

பின்னர் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணிக்கு தனது இரண்டாவது பெண் குழந்தையான எபி ரோஸைப் பெற்றெடுத்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறக்கும் போது இரு குழந்தைகளுக்கும் இடையேயான நேர வேறுபாடு 6 நிமிடங்கள் இருந்தாலும், முதல் குழந்தை துல்லியமாக 2022ம் ஆண்டிலும், இரண்டாவது குழந்தை 2023ம் ஆண்டிலும் பிறந்துள்ளன. இது அரிய நிகழ்வாகும்.

நள்ளிரவிலேயே குழந்தைகள் பிறக்கும் என்று தம்பதியினர் எதிர்பார்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தங்களுக்கு வெவ்வேறு வருடத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியோடு தம்பதியினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் - அமெரிக்காவில் சுவாரஸ்யம் ஒரு அமெரிக்கப் பெண் டெக்சாஸில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.ஆனால் அவை தனித்தனி ஆண்டுகளில் பிறந்தன என்று தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. காளி ஜோ ஸ்காட் தனது முதல் பெண் குழந்தையான அன்னி ஜோவை டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 11:55 மணிக்கு பெற்றெடுத்தார்.பின்னர் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணிக்கு தனது இரண்டாவது பெண் குழந்தையான எபி ரோஸைப் பெற்றெடுத்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.பிறக்கும் போது இரு குழந்தைகளுக்கும் இடையேயான நேர வேறுபாடு 6 நிமிடங்கள் இருந்தாலும், முதல் குழந்தை துல்லியமாக 2022ம் ஆண்டிலும், இரண்டாவது குழந்தை 2023ம் ஆண்டிலும் பிறந்துள்ளன. இது அரிய நிகழ்வாகும்.நள்ளிரவிலேயே குழந்தைகள் பிறக்கும் என்று தம்பதியினர் எதிர்பார்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தங்களுக்கு வெவ்வேறு வருடத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியோடு தம்பதியினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement