• Sep 03 2025

மன்னார் வீரர்கள் இருவர் தேசிய உதைபந்தாட்ட அணியில்; பெருமிதம் கொள்ளும் மன்னார்!

shanuja / Sep 2nd 2025, 9:28 am
image

இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்காக நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசலையை சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான செல்வன் N.கெஸ்ரோன் , செல்வன் K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவுப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 


குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட போட்டியானது சீனாவில் இம்மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


இப்போட்டி “ U16 Tainyu Liufang Cup – 2025” ற்கான போட்டியாகும். இதற்கான மேலதிக பயிற்சிகள் இம் மாதம் 4ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவுள்ளது.


இம்மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வியை மேற்கொள்கின்றார்கள்  என்பதன் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு உதவுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள். 


இம்மாணவர்களது மேலதிக பயிற்சிக்கான செலவினையும், அவர்கள் சீனாவில் இருக்கின்ற போது ஏற்பட உள்ள மேலதிக செலவினையும் தாங்கிக்கொள்வதற்கான பண வசதி இல்லாத சூழ்நிலையில் தற்போது இருக்கின்றார்கள். 


எனவே இம்மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட அணியில் ஒருவராக விளையாடுவதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் வீரர்கள் இருவர் தேசிய உதைபந்தாட்ட அணியில்; பெருமிதம் கொள்ளும் மன்னார் இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்காக நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசலையை சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான செல்வன் N.கெஸ்ரோன் , செல்வன் K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவுப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட போட்டியானது சீனாவில் இம்மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இப்போட்டி “ U16 Tainyu Liufang Cup – 2025” ற்கான போட்டியாகும். இதற்கான மேலதிக பயிற்சிகள் இம் மாதம் 4ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவுள்ளது.இம்மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வியை மேற்கொள்கின்றார்கள்  என்பதன் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு உதவுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள். இம்மாணவர்களது மேலதிக பயிற்சிக்கான செலவினையும், அவர்கள் சீனாவில் இருக்கின்ற போது ஏற்பட உள்ள மேலதிக செலவினையும் தாங்கிக்கொள்வதற்கான பண வசதி இல்லாத சூழ்நிலையில் தற்போது இருக்கின்றார்கள். எனவே இம்மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட அணியில் ஒருவராக விளையாடுவதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement