• May 11 2024

உக்ரைன் தலைநகர் மீதான ரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு பதிலடி உறுதி- உக்ரைன் ராணுவ உளவுத்துறை எச்சரிக்கை! samugammedia

Tamil nila / May 30th 2023, 7:36 am
image

Advertisement

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் ஆரம்பித்து  இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை. இந்தப் போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உக்ரைனில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் மீதான ரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு பதிலடி உறுதி என உக்ரைன் ராணுவ உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


திங்களன்று முன்னெடுக்கப்பட்ட ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதல் ஒருவகையில் தோல்வி தான் என உக்ரைன் தளபதி Kyrylo Budanov தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஏவுகணைகளை தங்களால் முறியடிக்க முடிந்தது என குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை உயிரிழப்பு தொடர்பில் தகவல் ஏதும் வெளிவரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், ஏவுகணை எச்சங்களால் குடியிருப்பு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரு இரவுகள் கடுமையான ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்த ரஷ்யா, திங்களன்று திடீரென்று கண்மூடித்தனமாக ஏவுகணை தாக்குதலை தொடுத்தது.



இந்த மாதத்தில் மட்டும் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா 16 வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. சமீபத்திய தாக்குதலானது வழக்கத்திற்கு மாறானது, மட்டுமின்றி பகலில் தாக்குதலை தொடுத்துள்ளனர்.

மேலும் நகர மையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் இதுவரை உக்ரைன் தலைநகர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும், இரவு நேரங்களில் நடந்துள்ளது, மேலும் முக்கியமான கட்டமைப்புகள் மீது தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பின்னர் தளபதி Budanov தெரிவிக்கையில், ரஷ்யாவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது. கீவ் மக்களை ரஷ்ய நிர்வாகம் குறைமதிப்பிட்டுள்ளது அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றார்.

எங்கள் மீது தாக்குதல் தொடுத்து, பயப்படுத்தலாம் என கனவு கண்டால், அதற்காக வருந்த நேரிடும், இது உறுதி எனவும் தளபதி Budanov தெரிவித்துள்ளார்.

வெளியான தகவல்களின்படி, ஒருவர் மட்டுமே காயமடைந்துள்ளார் எனவும் அனைத்து ஏவுகணைகளும் உக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டன எனவும் தெரியவந்துள்ளது.

ஆனால், ரஷ்யா தரப்பில், தங்கள் இலக்குகள் அனைத்தும் திட்டமிட்டபடி அழிக்கப்பட்டன என தெரிவித்துள்ளனர். இருப்பினும், வான்வழித் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் பல உக்ரேனிய பிராந்தியங்களிலும் ஒலித்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


உக்ரைன் தலைநகர் மீதான ரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு பதிலடி உறுதி- உக்ரைன் ராணுவ உளவுத்துறை எச்சரிக்கை samugammedia ரஷ்யா - உக்ரைன் இடையே போர் ஆரம்பித்து  இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை. இந்தப் போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உக்ரைனில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன.இந்நிலையில் உக்ரைன் தலைநகர் மீதான ரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு பதிலடி உறுதி என உக்ரைன் ராணுவ உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.திங்களன்று முன்னெடுக்கப்பட்ட ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதல் ஒருவகையில் தோல்வி தான் என உக்ரைன் தளபதி Kyrylo Budanov தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் ஏவுகணைகளை தங்களால் முறியடிக்க முடிந்தது என குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை உயிரிழப்பு தொடர்பில் தகவல் ஏதும் வெளிவரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.இருப்பினும், ஏவுகணை எச்சங்களால் குடியிருப்பு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரு இரவுகள் கடுமையான ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்த ரஷ்யா, திங்களன்று திடீரென்று கண்மூடித்தனமாக ஏவுகணை தாக்குதலை தொடுத்தது.இந்த மாதத்தில் மட்டும் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா 16 வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. சமீபத்திய தாக்குதலானது வழக்கத்திற்கு மாறானது, மட்டுமின்றி பகலில் தாக்குதலை தொடுத்துள்ளனர்.மேலும் நகர மையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் இதுவரை உக்ரைன் தலைநகர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும், இரவு நேரங்களில் நடந்துள்ளது, மேலும் முக்கியமான கட்டமைப்புகள் மீது தொடுக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு பின்னர் தளபதி Budanov தெரிவிக்கையில், ரஷ்யாவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது. கீவ் மக்களை ரஷ்ய நிர்வாகம் குறைமதிப்பிட்டுள்ளது அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றார்.எங்கள் மீது தாக்குதல் தொடுத்து, பயப்படுத்தலாம் என கனவு கண்டால், அதற்காக வருந்த நேரிடும், இது உறுதி எனவும் தளபதி Budanov தெரிவித்துள்ளார்.வெளியான தகவல்களின்படி, ஒருவர் மட்டுமே காயமடைந்துள்ளார் எனவும் அனைத்து ஏவுகணைகளும் உக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டன எனவும் தெரியவந்துள்ளது.ஆனால், ரஷ்யா தரப்பில், தங்கள் இலக்குகள் அனைத்தும் திட்டமிட்டபடி அழிக்கப்பட்டன என தெரிவித்துள்ளனர். இருப்பினும், வான்வழித் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் பல உக்ரேனிய பிராந்தியங்களிலும் ஒலித்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement