அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஐயம் செய்துள்ளார்.
இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பாக செயற்பட்டு வரும் நிலையிலேயே இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் நிலையில் அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளார்.
குறித்த நாடுகளுக்கிடையிலான விஜயத்தின் மூலம், சுதந்திரமானதும், சுபீட்சமானதுமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதையும், குறித்த நாடுகளுடன் அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுமே பிரதான நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் அமெரிக்கா. அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஐயம் செய்துள்ளார்.இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பாக செயற்பட்டு வரும் நிலையிலேயே இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் நிலையில் அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளார்.குறித்த நாடுகளுக்கிடையிலான விஜயத்தின் மூலம், சுதந்திரமானதும், சுபீட்சமானதுமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதையும், குறித்த நாடுகளுடன் அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுமே பிரதான நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.