• May 05 2024

பலம் பெறும் விக்கியின் கூட்டு: ஜனநாயகப் போராளிகளும் இணைவு!

Sharmi / Jan 12th 2023, 9:44 am
image

Advertisement

உள்ளூராட்சி சபை தேர்தல் திருவிழாவிற்கு பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட முக்கிய கட்சிகள் பலவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடுவதற்கான கட்டுப்பணங்களை செலுத்தி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் யாழிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அரசியற் கூட்டணி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியே தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.  

அதேவேளை இம்முறை முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தலைமையில் பாரிய கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள டெலோ, புளொட் மற்றும் யாழ் மாநகர முன்னாள் முதலமைச்சர் சி.மணிவண்ணன் அணி  ஆகியோர் தயாராகி வருகின்றனர்..

இவ்வாறானதொரு நிலையில்  புதிய கூட்டணியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது.

இந்நிலையில் இப் புதிய கூட்டணியில்  உள்ள கட்சித் தலைவர்கள் நாளை ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளனர்.

அதேவேளை நாளை மறுதினம் ஊடக சந்திப்பின் வாயிலாக  கூட்டணியின் சின்னம் பெயர் என்பன தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அதேவேளை இந்த கூட்டணியானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பலம் பெறும் விக்கியின் கூட்டு: ஜனநாயகப் போராளிகளும் இணைவு உள்ளூராட்சி சபை தேர்தல் திருவிழாவிற்கு பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன.இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட முக்கிய கட்சிகள் பலவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடுவதற்கான கட்டுப்பணங்களை செலுத்தி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் யாழிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அரசியற் கூட்டணி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியே தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.  அதேவேளை இம்முறை முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தலைமையில் பாரிய கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள டெலோ, புளொட் மற்றும் யாழ் மாநகர முன்னாள் முதலமைச்சர் சி.மணிவண்ணன் அணி  ஆகியோர் தயாராகி வருகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில்  புதிய கூட்டணியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது.இந்நிலையில் இப் புதிய கூட்டணியில்  உள்ள கட்சித் தலைவர்கள் நாளை ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளனர்.அதேவேளை நாளை மறுதினம் ஊடக சந்திப்பின் வாயிலாக  கூட்டணியின் சின்னம் பெயர் என்பன தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அதேவேளை இந்த கூட்டணியானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement