• Nov 25 2024

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை உடன் நிறுத்தப்பட வேண்டும்...! சபையில் சித்தார்த்தன் எம்.பி வேண்டுகோள்...! samugammedia

Sharmi / Dec 8th 2023, 10:06 am
image

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை உடன் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீன்பிடிப் பிரச்சினை ஒன்று இருக்கின்றது. மிக அண்மையிலே தமிழ் நாட்டிலே இருந்து நூற்றுக்கணக்கான ரோலர்கள் வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.

இது நேரடியாக தனியே மீன்பிடி அமைச்சருடன் கதைப்பது அல்ல. கொள்கை ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருக்கக்கூடிய உறவைக் கொண்டுதான் இவ்விடயத்தைச் செய்ய முடியும்.

ஆகவேதான் நாங்கள் மீண்டும் மீண்டும் இந்த உறவுகளை சரியாகக் கொண்டுவர வேண்டுமென்பதை கூறுகின்றோம். ஏனென்றால் இருபது முப்பது வருடங்களாக இவ்விடயம் பேசப்படுகின்றது.

ஒன்றுமே நடக்கவில்லை. தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் வருகின்றார்கள். அது நிச்சயமாக தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படாவிட்டால் எங்களுடைய கரையோரங்களில் வாழக்கூடிய மீனவ சமூகத்தினுடைய முழு வருமானமும் இல்லாமல்போகும். அவர்கள் ஒரு வறுமைக்கோட்டின்கீழ் செல்லக்கூடிய ஒரு நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது.

ஆகவே, அமைச்சர் தனியாக அல்ல, அமைச்சர் வேண்டுமென்றால் நாங்கள் கூட வருவோம். நாங்கள் நேரடியாகக் கதைத்து அதை நிச்சயமாக நிறுத்துவதற்கான முழுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதை நாங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை உடன் நிறுத்தப்பட வேண்டும். சபையில் சித்தார்த்தன் எம்.பி வேண்டுகோள். samugammedia இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை உடன் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மீன்பிடிப் பிரச்சினை ஒன்று இருக்கின்றது. மிக அண்மையிலே தமிழ் நாட்டிலே இருந்து நூற்றுக்கணக்கான ரோலர்கள் வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இது நேரடியாக தனியே மீன்பிடி அமைச்சருடன் கதைப்பது அல்ல. கொள்கை ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருக்கக்கூடிய உறவைக் கொண்டுதான் இவ்விடயத்தைச் செய்ய முடியும். ஆகவேதான் நாங்கள் மீண்டும் மீண்டும் இந்த உறவுகளை சரியாகக் கொண்டுவர வேண்டுமென்பதை கூறுகின்றோம். ஏனென்றால் இருபது முப்பது வருடங்களாக இவ்விடயம் பேசப்படுகின்றது. ஒன்றுமே நடக்கவில்லை. தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் வருகின்றார்கள். அது நிச்சயமாக தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படாவிட்டால் எங்களுடைய கரையோரங்களில் வாழக்கூடிய மீனவ சமூகத்தினுடைய முழு வருமானமும் இல்லாமல்போகும். அவர்கள் ஒரு வறுமைக்கோட்டின்கீழ் செல்லக்கூடிய ஒரு நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது.ஆகவே, அமைச்சர் தனியாக அல்ல, அமைச்சர் வேண்டுமென்றால் நாங்கள் கூட வருவோம். நாங்கள் நேரடியாகக் கதைத்து அதை நிச்சயமாக நிறுத்துவதற்கான முழுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதை நாங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement