• May 18 2024

பச்சை மிளகாய் குறித்து மக்களுக்கு வெளியான எச்சரிக்கை! samugammedia

Chithra / May 26th 2023, 8:30 am
image

Advertisement

கனடாவில் பச்சை மிளகாய் வகையொன்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Simply Hot என்னும் பண்டக் குறியைக் கொண்ட பச்சை மிளாகய் வகை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய சுகாதார திணைக்களத்தினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பச்சை மிளகாயில் சால்மோன்லா பக்டீரியா வகை காணப்படுவதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அல்பர்ட்டா மற்றும் சஸ்கட்ச்வான் ஆகிய பகுதிகளில் இந்த பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


50 கிராம் எடையுடைய பக்கட்களில் குறித்த பக்டீரியா வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகை பச்சை மிளகாய் பக்கட்டுகளை கொள்வனவு செய்து பயன்படுத்த வேண்டாம் என கனடிய சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இளையோர், கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த பச்சை மிளகாய் நுகர்வதனால் நோய்வாய்ப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பச்சை மிளகாய் குறித்து மக்களுக்கு வெளியான எச்சரிக்கை samugammedia கனடாவில் பச்சை மிளகாய் வகையொன்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Simply Hot என்னும் பண்டக் குறியைக் கொண்ட பச்சை மிளாகய் வகை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய சுகாதார திணைக்களத்தினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த பச்சை மிளகாயில் சால்மோன்லா பக்டீரியா வகை காணப்படுவதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.அல்பர்ட்டா மற்றும் சஸ்கட்ச்வான் ஆகிய பகுதிகளில் இந்த பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டுள்ளது.50 கிராம் எடையுடைய பக்கட்களில் குறித்த பக்டீரியா வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த வகை பச்சை மிளகாய் பக்கட்டுகளை கொள்வனவு செய்து பயன்படுத்த வேண்டாம் என கனடிய சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.இளையோர், கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த பச்சை மிளகாய் நுகர்வதனால் நோய்வாய்ப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement