• Feb 11 2025

தையிட்டி விகாரையைத் தமிழர்கள் இடிக்க இடமளியோம்! - போராட்டம் நடத்தி மிரட்ட முடியாது! கம்மன்பில சூளுரை

Chithra / Feb 10th 2025, 8:04 am
image


யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரையில் தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை சிங்கள - பௌத்தர்களுக்குச் சொந்தமானது. இந்த விகாரை அமைந்துள்ள காணியும் தற்போது விகாரை நிர்வாகத்துக்கே உரித்தானது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதற்குத் தமிழ் மக்களுக்கும், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எந்த அருகதையும் கிடையாது.

தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை இடிக்க வேண்டும் என்று கூச்சலிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்த விடயங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த விகாரையில் தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம். இந்த விகாரைக்கு எதிராகப் பௌர்ணமி தினத்தன்று தமிழர்கள் போராட்டம் நடத்தி எம்மை மிரட்ட முடியாது. - என்றார்.

தையிட்டி விகாரையைத் தமிழர்கள் இடிக்க இடமளியோம் - போராட்டம் நடத்தி மிரட்ட முடியாது கம்மன்பில சூளுரை யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரையில் தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை சிங்கள - பௌத்தர்களுக்குச் சொந்தமானது. இந்த விகாரை அமைந்துள்ள காணியும் தற்போது விகாரை நிர்வாகத்துக்கே உரித்தானது.எனவே, இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதற்குத் தமிழ் மக்களுக்கும், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எந்த அருகதையும் கிடையாது.தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை இடிக்க வேண்டும் என்று கூச்சலிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்த விடயங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.இந்த விகாரையில் தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம். இந்த விகாரைக்கு எதிராகப் பௌர்ணமி தினத்தன்று தமிழர்கள் போராட்டம் நடத்தி எம்மை மிரட்ட முடியாது. - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement