• May 03 2024

தமிழர்களுக்கு எதிராக மஹிந்த நடத்தியது போர் அல்ல இனப்படுகொலையே நடைபெற்றது...! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Dec 18th 2023, 9:09 am
image

Advertisement

மஹிந்த ராஜபக்ச தமிழர்கள் மீது நடத்தியது போர் அல்ல இனப்படுகொலையே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் நேற்று(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவைச் சில தினங்களுக்கு முன்னர் தெரிவு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் தனது பதவியேற்பு உரை நிகழ்த்தியபோது, போர் வெற்றிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுஜன பெரமுன கூட்டணியே காரணம் என்ற கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவர் சார்ந்த அணியோ இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. பொருளாதார வளர்ச்சி யின் பெயரில் அவர்களது காலத்தில் அவர்கள் முன்னெடுத்த அனைத்து வேலைத்திட்டங்களுமே நாட்டைக் கடனுக்குள் தள்ளியுள்ளது.

குறிப்பாக நாட்டை சீனாவின் கடன் பொறிக்குள் தள்ளி சீனாவை இலங்கை விவகாரங்கள் தொடர்பாக தவிர்க்க முடியாத தரப்பாகக் கொண்டுவந்து நிரந்தரமாக இலங்கையில் பிடி ஒன்றை வைத்திருப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதற்குத்தான் ராஜபக்ஷ தரப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்ற பேரிலே நடத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் அமைந்தன.

அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்பு தாமரைக் கோபுரம், கொழும்புத் துறைமுக நகரம் என அனைத்துமே முழுக்க முழுக்க நாட்டினுடைய அபிவிருத்தி என்கின்ற நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் அல்ல.

மாறாக இந்த வேலைத்திட்டங்களினூடாக இலங்கை சீனாவுக்குக் கடன் பட்டு முழுமையாகத் தவிர்க்க முடியாத சக்தியாக இடம்பெறுவதற்குச் சீனாவுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமையே உண்மை. குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் இன்று நாட்டுக்குச் சுமையாக இருக்கின்றனவே தவிர டொலர் வருமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற திட்டங்கள் அல்ல.

உண்மை இதுவாக இருக்கின்றபோது, தான் ஒரு புதிய பதவியை எடுத்ததால் இவ்வாறு கூறினால் மக்கள் அதை நம்புவார்கள் என்ற அடிப்படையில் அவர் இதனைக் கூறியதாகவே பார்க்கின்றோம். 

மக்கள் இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.மக்கள் 5 வருடங்கள் ஆணை கொடுத்திருந்த நிலையில் 2 வருடங்களுக்கு முன்னதாகவே கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டி அடித்திருந்தனர். 

அதற்கு முன்னதாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவையும் வீட்டுக்கு அனுப்பியிருந்தனர்.

ஆகவே, மக்களின் நிலைபற்றி பொதுஜன பெரமுன தரப்புக்கு விளங்கவில்லை என்றால் அவர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் அனைத்து மக்களும் தெளிவான பதிலை வழங்குவார்கள்.

இதேவேளை, போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்தது தான்தான் என்று ஒரு கருத்தையும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். உண்மையில் அவர் நடத்தியது போர் அல்ல்

இனப்படுகொலையே. இன்று காசாவில் நடைபெறுவதும் போர் அல்ல. அங்கு நடைபெறுவதும் இனப்படுகொலையே.கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்ற அனைத்தையும் அழிப்பது போர் அல்ல. இனப்படுகொலை செய்வதற்கு ஒரு கெட்டித்தனமும் தேவையில்லை. கிட்லர் போன்ற ஒரு முட்டாளும் செய்யலாம். தமிழினத்துக்கு நடந்தது இனப்படுகொலையே. காசா மக்களுக்கும் அதுதான் நடக்கின்றது.

போர் என்ற பெயரில் நடந்த இனப்படுகொலை எந்தளவு தூரத்துக்கு அது ஓர் இனப்படுகொலை என விளங்கிக் கொள்கின்ற நிலை உருவாகியிருக்கின்றதென்றால் அந்த இனப்படுகொலை செய்த தரப்பு தங்களுடைய நலன்கள் என்று வருகின்ற போது தமிழர்களுக்கு எதிராகப் பாவித்த ஆயுதங்களை விசேடமாக சட்ட ஆயுதங்களை சிங்களமக்களுக்கு எதிராகவும் பாவிக்கத் தயார் என்ற நிலையைக் காட்டியிருக்கின்றது.

இந் நிலையில், இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த விடயங்களை, ஆட்சியாளர்கள் சொன்ன கருத்துக்களை ஏற்று அவற்றைக் கேள்விக்குட்படுத்தாமல் இருந்த சிங்கள மக்கள் இன்று தங்களுக்கே நடந்த பின்னர் தமிழர்களுக்கு எவ்வாறு நடந்திருக்கும் என்பதாக விளங்கிக் கொள்வதாகத்தான் நிலைமை இருக்கின்றது.

போரிலே வெற்றி பெற்றதாகக் கூறுவது உண்மையில் கவலைக்குரிய ஒரு விடயம். அவர்களது வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் எதனையும் இதுவரை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்பதையும் தொடர்ந்தும் அதே பாதையில்தான் செல்ல விரும்புகின்றார்கள் என்பதனையும் காட்டுகின்றது.

தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தியவர்கள் இன்று பொருளாதாரப் போரை நடத்துகின்றார்கள். இந்தப் பொருளாதாரப் போரானது சாதாரண, நடுத்தர வர்க்க மக்களுக்கும், மிகவும் கஷ்டப்பட்ட மக்களுக்கும் எதிராகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.


தமிழர்களுக்கு எதிராக மஹிந்த நடத்தியது போர் அல்ல இனப்படுகொலையே நடைபெற்றது. கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு.samugammedia மஹிந்த ராஜபக்ச தமிழர்கள் மீது நடத்தியது போர் அல்ல இனப்படுகொலையே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.யாழில் நேற்று(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவைச் சில தினங்களுக்கு முன்னர் தெரிவு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் தனது பதவியேற்பு உரை நிகழ்த்தியபோது, போர் வெற்றிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுஜன பெரமுன கூட்டணியே காரணம் என்ற கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவர் சார்ந்த அணியோ இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. பொருளாதார வளர்ச்சி யின் பெயரில் அவர்களது காலத்தில் அவர்கள் முன்னெடுத்த அனைத்து வேலைத்திட்டங்களுமே நாட்டைக் கடனுக்குள் தள்ளியுள்ளது.குறிப்பாக நாட்டை சீனாவின் கடன் பொறிக்குள் தள்ளி சீனாவை இலங்கை விவகாரங்கள் தொடர்பாக தவிர்க்க முடியாத தரப்பாகக் கொண்டுவந்து நிரந்தரமாக இலங்கையில் பிடி ஒன்றை வைத்திருப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதற்குத்தான் ராஜபக்ஷ தரப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்ற பேரிலே நடத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் அமைந்தன.அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்பு தாமரைக் கோபுரம், கொழும்புத் துறைமுக நகரம் என அனைத்துமே முழுக்க முழுக்க நாட்டினுடைய அபிவிருத்தி என்கின்ற நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் அல்ல.மாறாக இந்த வேலைத்திட்டங்களினூடாக இலங்கை சீனாவுக்குக் கடன் பட்டு முழுமையாகத் தவிர்க்க முடியாத சக்தியாக இடம்பெறுவதற்குச் சீனாவுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமையே உண்மை. குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் இன்று நாட்டுக்குச் சுமையாக இருக்கின்றனவே தவிர டொலர் வருமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற திட்டங்கள் அல்ல.உண்மை இதுவாக இருக்கின்றபோது, தான் ஒரு புதிய பதவியை எடுத்ததால் இவ்வாறு கூறினால் மக்கள் அதை நம்புவார்கள் என்ற அடிப்படையில் அவர் இதனைக் கூறியதாகவே பார்க்கின்றோம். மக்கள் இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.மக்கள் 5 வருடங்கள் ஆணை கொடுத்திருந்த நிலையில் 2 வருடங்களுக்கு முன்னதாகவே கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டி அடித்திருந்தனர். அதற்கு முன்னதாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவையும் வீட்டுக்கு அனுப்பியிருந்தனர்.ஆகவே, மக்களின் நிலைபற்றி பொதுஜன பெரமுன தரப்புக்கு விளங்கவில்லை என்றால் அவர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் அனைத்து மக்களும் தெளிவான பதிலை வழங்குவார்கள்.இதேவேளை, போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்தது தான்தான் என்று ஒரு கருத்தையும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். உண்மையில் அவர் நடத்தியது போர் அல்ல்இனப்படுகொலையே. இன்று காசாவில் நடைபெறுவதும் போர் அல்ல. அங்கு நடைபெறுவதும் இனப்படுகொலையே.கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்ற அனைத்தையும் அழிப்பது போர் அல்ல. இனப்படுகொலை செய்வதற்கு ஒரு கெட்டித்தனமும் தேவையில்லை. கிட்லர் போன்ற ஒரு முட்டாளும் செய்யலாம். தமிழினத்துக்கு நடந்தது இனப்படுகொலையே. காசா மக்களுக்கும் அதுதான் நடக்கின்றது.போர் என்ற பெயரில் நடந்த இனப்படுகொலை எந்தளவு தூரத்துக்கு அது ஓர் இனப்படுகொலை என விளங்கிக் கொள்கின்ற நிலை உருவாகியிருக்கின்றதென்றால் அந்த இனப்படுகொலை செய்த தரப்பு தங்களுடைய நலன்கள் என்று வருகின்ற போது தமிழர்களுக்கு எதிராகப் பாவித்த ஆயுதங்களை விசேடமாக சட்ட ஆயுதங்களை சிங்களமக்களுக்கு எதிராகவும் பாவிக்கத் தயார் என்ற நிலையைக் காட்டியிருக்கின்றது.இந் நிலையில், இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த விடயங்களை, ஆட்சியாளர்கள் சொன்ன கருத்துக்களை ஏற்று அவற்றைக் கேள்விக்குட்படுத்தாமல் இருந்த சிங்கள மக்கள் இன்று தங்களுக்கே நடந்த பின்னர் தமிழர்களுக்கு எவ்வாறு நடந்திருக்கும் என்பதாக விளங்கிக் கொள்வதாகத்தான் நிலைமை இருக்கின்றது.போரிலே வெற்றி பெற்றதாகக் கூறுவது உண்மையில் கவலைக்குரிய ஒரு விடயம். அவர்களது வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் எதனையும் இதுவரை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்பதையும் தொடர்ந்தும் அதே பாதையில்தான் செல்ல விரும்புகின்றார்கள் என்பதனையும் காட்டுகின்றது.தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தியவர்கள் இன்று பொருளாதாரப் போரை நடத்துகின்றார்கள். இந்தப் பொருளாதாரப் போரானது சாதாரண, நடுத்தர வர்க்க மக்களுக்கும், மிகவும் கஷ்டப்பட்ட மக்களுக்கும் எதிராகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement