• Jun 01 2024

வட்ஸ்அப் குழு 'கெத்து பசங்க' அதிரடியாக கைது!

Chithra / Jan 7th 2023, 3:23 pm
image

Advertisement

வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகள் நேற்று சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தி, வன்முறை செயல்களில் ஈடுபடும் குழு ஒன்றின் உறுப்பினர்களை கைது செய்துள்ளனர்.

இந்த பிரதேசத்தில் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்த “கெத்து பசங்க” என்ற பெயரில் அழைக்கப்படும் குழுவின் உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்ஸ் அப் சமூக ஊடகம் மூலம் ஒருங்கிணைந்து, இவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. 


இந்த குழுவில் சம்பந்தப்பட்டுள்ள 18 வயதான நான்கு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூவரசங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி பூவரசங்குளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த வட்ஸ் அப் குழு தொடர்பான தகவல் கிடைத்திருந்தது.   

வட்ஸ்அப் குழு 'கெத்து பசங்க' அதிரடியாக கைது வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகள் நேற்று சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தி, வன்முறை செயல்களில் ஈடுபடும் குழு ஒன்றின் உறுப்பினர்களை கைது செய்துள்ளனர்.இந்த பிரதேசத்தில் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்த “கெத்து பசங்க” என்ற பெயரில் அழைக்கப்படும் குழுவின் உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.வட்ஸ் அப் சமூக ஊடகம் மூலம் ஒருங்கிணைந்து, இவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த குழுவில் சம்பந்தப்பட்டுள்ள 18 வயதான நான்கு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூவரசங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி பூவரசங்குளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த வட்ஸ் அப் குழு தொடர்பான தகவல் கிடைத்திருந்தது.   

Advertisement

Advertisement

Advertisement