• May 06 2024

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 55,000 டொலர் பணம் எங்கே? சஜித் கேள்வி samugammedia

Chithra / Nov 22nd 2023, 12:30 pm
image

Advertisement


இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் நன்கொடையாக வழங்கிய 55,000 டொலர் தொகை இன்னும் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா 50,000 டொலர்களையும், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் 5,000 டொலர்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல்லேகல மற்றும் ஆர்.பிரேமதாச மைதானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

குறித்த பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், விளையாட்டுத்துறை அமைச்சர் தலையிடுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 55,000 டொலர் பணம் எங்கே சஜித் கேள்வி samugammedia இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் நன்கொடையாக வழங்கிய 55,000 டொலர் தொகை இன்னும் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா 50,000 டொலர்களையும், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் 5,000 டொலர்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.பல்லேகல மற்றும் ஆர்.பிரேமதாச மைதானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.குறித்த பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், விளையாட்டுத்துறை அமைச்சர் தலையிடுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement