• May 18 2024

தீவிரமடையும் மோதல்...! இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கும் பாதிப்பா? samugammedia

Sharmi / Oct 13th 2023, 6:49 pm
image

Advertisement

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் ஆறாவது நாளாவது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இஸ்ரேலில் காணாமற்போன இருவரைத் தவிர வேறு எந்த இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்ட சம்பவம் இதுவரை பதிவாகவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்தார்.

போரில் பாதிக்கப்படும் இலங்கையர்களுக்கு உதவிகளை உடனடியாக வழங்கத் தேவையான நிதியை வழங்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

அத்துடன், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக வணிக விமான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

தீவிரமடையும் மோதல். இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கும் பாதிப்பா samugammedia இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் ஆறாவது நாளாவது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் இஸ்ரேலில் காணாமற்போன இருவரைத் தவிர வேறு எந்த இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்ட சம்பவம் இதுவரை பதிவாகவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்தார்.போரில் பாதிக்கப்படும் இலங்கையர்களுக்கு உதவிகளை உடனடியாக வழங்கத் தேவையான நிதியை வழங்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.அத்துடன், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக வணிக விமான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

Advertisement

Advertisement

Advertisement