• May 11 2024

பால்மாவின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா?...! வெளியான தகவல்..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 10:10 am
image

Advertisement

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபா சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு கடந்த காலங்களில் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபா வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால்மாவின் விலையில் மாற்றம் இல்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பால்மாவின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா. வெளியான தகவல்.samugammedia இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபா சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு கடந்த காலங்களில் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபா வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால்மாவின் விலையில் மாற்றம் இல்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement