• May 04 2024

உலக அரசியலில் பரபரப்பு: பின்லாந்து மீது போர் தொடுக்க தயாராகும் ரஷ்யா!samugammedia

Sharmi / Apr 5th 2023, 9:54 pm
image

Advertisement

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இதற்கிடையே நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து நாடு நடவடிக்கைகளை எடுத்தது. 

இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பில் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்தது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்சில் நடந்த விழாவில் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டது. 

இதன்மூலம் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் ரஷ்யா பகிரும் எல்லை இரட்டிப்பாகியுள்ளது. 

பின்லாந்து, ரஷ்யாவுடன் 1340 கி.மீ கிழக்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளதால் நேட்டோ படைகள் தேவைப்பட்டால் பின்லாந்து எல்லைக்கு அனுப்பப்படலாம். 

இது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என்று கருதுகிறது. நேட்டோவில் பின்லாந்து இணைந்ததற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றது. 

இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு தெரிவிக்கையில் ,

'பின்லாந்தை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொண்டதால் உக்ரைன் போர் பிற பகுதிகளுக்கும் பரவுவதற்கான அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

பெலாரஸ் நாட்டின் போர் விமானங்கள் எங்களது அணு ஆயுதங்கள் ஏந்தி தாக்குதல் நடத்தும் வகையில் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார். 

இதன்மூலம் பின்லாந்து மீது ரஷ்யா போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போரில் ரஷ்ய படைகள் தீவிரமாக உள்ள நிலையில் பின்லாந்து மீதும் தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மேலும் பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் நேட்டோ உறுப்பு நாடுகள் களத்தில் குதிக்கும். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

உலக அரசியலில் பரபரப்பு: பின்லாந்து மீது போர் தொடுக்க தயாராகும் ரஷ்யாsamugammedia அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இதற்கிடையே நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து நாடு நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பில் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்தது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்சில் நடந்த விழாவில் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டது. இதன்மூலம் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் ரஷ்யா பகிரும் எல்லை இரட்டிப்பாகியுள்ளது. பின்லாந்து, ரஷ்யாவுடன் 1340 கி.மீ கிழக்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளதால் நேட்டோ படைகள் தேவைப்பட்டால் பின்லாந்து எல்லைக்கு அனுப்பப்படலாம். இது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என்று கருதுகிறது. நேட்டோவில் பின்லாந்து இணைந்ததற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு தெரிவிக்கையில் ,'பின்லாந்தை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொண்டதால் உக்ரைன் போர் பிற பகுதிகளுக்கும் பரவுவதற்கான அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது. பெலாரஸ் நாட்டின் போர் விமானங்கள் எங்களது அணு ஆயுதங்கள் ஏந்தி தாக்குதல் நடத்தும் வகையில் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார். இதன்மூலம் பின்லாந்து மீது ரஷ்யா போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போரில் ரஷ்ய படைகள் தீவிரமாக உள்ள நிலையில் பின்லாந்து மீதும் தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் நேட்டோ உறுப்பு நாடுகள் களத்தில் குதிக்கும். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement