• Jan 10 2025

உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில்!

Chithra / Jan 9th 2025, 11:38 am
image

  

இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து நடத்துகிறது.

கொழும்பில் ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை பார்வை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம்.

இதேவேளை, கொழும்பில் சினமன்  லைப் ஹோட்டலில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி  வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை பார்வை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம்.

யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபத்தில் இம்மாதம்  24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையும், காலியில் மாநகர சபையில் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

இலங்கையில் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டிடுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி தொடர்பாக  விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று புதன்கிழமை (08) கொழும்பிலுள்ள சினமன் லைப் ஹோட்டலில் நடைபெற்றது.

ஊடக சந்திப்பில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பட்ச், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி முகாமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் மார்தா எச்செவர்ரியா கோன்சலஸ் மற்றும் சினமன்  லைப் ஹோட்டல் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் ரதிஷா தளுவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊடக சந்திப்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் உரையாற்றுகையில்,

நாங்கள் புகைப்படங்கள் ஊடாக கதைகளை சொல்லும் கலையை கொண்டாடுவதற்காக இங்கே கூடியிருக்கின்றோம்.

இந்த ஊடகம் மொழி போன்ற தடைகளை கடந்து மிகவும் முக்கியமான கதைகளுடன் எங்களை இணைக்கின்றது.தொடர்புபடுத்துகின்றது.

இந்த பயணம் டிசம்பர் 1955 இல் ஆரம்பமானது, இது ஆம்ஸ்டடாமில் ஆரம்பமானது. தற்போது உலகை வலம் வருகின்றது.

சவால்களை வெளிப்படுத்தும் இந்த கண்காட்சி அதேவேளை உத்வேகம் அளிக்கும் உயர்தரம் வாய்ந்தகாட்சி கதைகளை வெளிப்படுத்துகின்றது.

செழிப்பான கலாச்சார பாரம்பரியத்தை பன்முகதன்மையை கொண்டுள்ள கொழும்பு இந்த கண்காட்சியை நடத்துவதற்கு பொருத்தமான இடமாகும்.

பத்தாம் திகதி நாங்கள் காட்சிப்படுத்தும்போது இந்த அற்புதமான படங்களை காட்சிகதைகளை நீங்கள் பார்க்கும்போது, சொல்லப்படாத கதைகள் குறித்து கவனத்தை திசைதிருப்புவதற்கான புகைப்படக்கலையின் தனித்துவமான திறமை உங்களுக்கு நினைவுக்கு வரும்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஊடக சுதந்திரத்திற்காகவும் நெறிமுறையான ஊடகதுறைக்காகவும் குரல்கொடுப்பதில் முன்னணியில் உள்ளது என்றார்.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர்  போனி ஹார்பட்ச் இந்த சந்திப்பில் குறிப்பிடுகையில்,

இலங்கையில் நாளை ளெ்ளிக்கிழமை 2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி ஆரம்பமாவுள்ளதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இந்த கண்காட்சி இலங்கையில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கையில் நடைபெறுகிறது.

இலங்கை போன்ற வலுவான ஜனநாயக நாட்டிற்கு ஊடக சுதந்திர உரிமை குறித்த விழிப்புணர்வு அவசியம். 

அதனாலேயே நெதர்லாந்து தூதரகம் இலங்கையில் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சி ஊடாக சுதந்திர மற்றும் தகவல்களை பெறுவதற்கான உரிமைகளுக்கு ஆ தரவளிக்கின்றோம் என்றார்.

உலக பத்திரிகை புகைப்படம் கண்காட்சி முகாமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் உலக பத்திரிகை புகைப்படம் மார்தா எச்செவர்ரியா கோன்சலஸ் குறிப்பிடுகையில்,

இவ்வருடம் உலக பத்திரிகை புகைப்பட விருது 70 ஆவது ஆண்டை கொண்டாடுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படப் போட்டிக்கு இம்மாதம் ஆம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். மேலதிக தகவலுக்கு https://www.worldpressphoto.org/contest/2025 என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம் என்றார்.

2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படப் போட்டி வெற்றி பெற்ற புகைப்படங்களைப் பார்வையிட உலகளாவிய ரீதியில் புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது.

உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில்   இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து நடத்துகிறது.கொழும்பில் ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை பார்வை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம்.இதேவேளை, கொழும்பில் சினமன்  லைப் ஹோட்டலில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி  வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை பார்வை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம்.யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபத்தில் இம்மாதம்  24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையும், காலியில் மாநகர சபையில் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.இலங்கையில் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டிடுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி தொடர்பாக  விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று புதன்கிழமை (08) கொழும்பிலுள்ள சினமன் லைப் ஹோட்டலில் நடைபெற்றது.ஊடக சந்திப்பில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பட்ச், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி முகாமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் மார்தா எச்செவர்ரியா கோன்சலஸ் மற்றும் சினமன்  லைப் ஹோட்டல் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் ரதிஷா தளுவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.ஊடக சந்திப்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் உரையாற்றுகையில்,நாங்கள் புகைப்படங்கள் ஊடாக கதைகளை சொல்லும் கலையை கொண்டாடுவதற்காக இங்கே கூடியிருக்கின்றோம்.இந்த ஊடகம் மொழி போன்ற தடைகளை கடந்து மிகவும் முக்கியமான கதைகளுடன் எங்களை இணைக்கின்றது.தொடர்புபடுத்துகின்றது.இந்த பயணம் டிசம்பர் 1955 இல் ஆரம்பமானது, இது ஆம்ஸ்டடாமில் ஆரம்பமானது. தற்போது உலகை வலம் வருகின்றது.சவால்களை வெளிப்படுத்தும் இந்த கண்காட்சி அதேவேளை உத்வேகம் அளிக்கும் உயர்தரம் வாய்ந்தகாட்சி கதைகளை வெளிப்படுத்துகின்றது.செழிப்பான கலாச்சார பாரம்பரியத்தை பன்முகதன்மையை கொண்டுள்ள கொழும்பு இந்த கண்காட்சியை நடத்துவதற்கு பொருத்தமான இடமாகும்.பத்தாம் திகதி நாங்கள் காட்சிப்படுத்தும்போது இந்த அற்புதமான படங்களை காட்சிகதைகளை நீங்கள் பார்க்கும்போது, சொல்லப்படாத கதைகள் குறித்து கவனத்தை திசைதிருப்புவதற்கான புகைப்படக்கலையின் தனித்துவமான திறமை உங்களுக்கு நினைவுக்கு வரும்.இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஊடக சுதந்திரத்திற்காகவும் நெறிமுறையான ஊடகதுறைக்காகவும் குரல்கொடுப்பதில் முன்னணியில் உள்ளது என்றார்.இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர்  போனி ஹார்பட்ச் இந்த சந்திப்பில் குறிப்பிடுகையில்,இலங்கையில் நாளை ளெ்ளிக்கிழமை 2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி ஆரம்பமாவுள்ளதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இந்த கண்காட்சி இலங்கையில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கையில் நடைபெறுகிறது.இலங்கை போன்ற வலுவான ஜனநாயக நாட்டிற்கு ஊடக சுதந்திர உரிமை குறித்த விழிப்புணர்வு அவசியம். அதனாலேயே நெதர்லாந்து தூதரகம் இலங்கையில் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சி ஊடாக சுதந்திர மற்றும் தகவல்களை பெறுவதற்கான உரிமைகளுக்கு ஆ தரவளிக்கின்றோம் என்றார்.உலக பத்திரிகை புகைப்படம் கண்காட்சி முகாமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் உலக பத்திரிகை புகைப்படம் மார்தா எச்செவர்ரியா கோன்சலஸ் குறிப்பிடுகையில்,இவ்வருடம் உலக பத்திரிகை புகைப்பட விருது 70 ஆவது ஆண்டை கொண்டாடுகிறது.2025 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படப் போட்டிக்கு இம்மாதம் ஆம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். மேலதிக தகவலுக்கு https://www.worldpressphoto.org/contest/2025 என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம் என்றார்.2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படப் போட்டி வெற்றி பெற்ற புகைப்படங்களைப் பார்வையிட உலகளாவிய ரீதியில் புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement