• May 18 2024

உலகளவில் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது!! ஐக்கிய நாடுகள் அறிவிப்பு!

crownson / Dec 29th 2022, 9:02 am
image

Advertisement

உலகளவில் உணவு உற்பத்தி செய்யும் அளவையும் உலக மக்கள் உட்கொள்ளும் அளவையும் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) குழு உணவுக் கழிவு குறியீட்டு அறிக்கை தயாரித்து வெளியிட்டுதுள்ளது.

குழுவின் கூற்றுப்படி உலகில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உண்ணாமல் வீணடிக்கப்படுகிறது.

இந்த உலகளாவிய உணவு விரயம் என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மதிப்பீடுகளின்படி, உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 8-10 சதவீதம் உட்கொள்ளப்படாத உணவுகளால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

UNEP இன் உணவுக் கழிவு  அறிக்கையானது உணவுக் கழிவுகளை அளவிடுவதற்கும், நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 12.3 இல் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் ஒரு பொதுவான வழிமுறையை வழங்குகிறது.

காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு மற்றும் மாசு மற்றும் கழிவு போன்ற நெருக்கடியை சமாளிக்க உணவு முறை சீர்திருத்தம் குறிப்பிடத்தக்கது என்று UNEP அறிக்கை குறிப்பிடுகிறது.

உற்பத்தி மற்றும் உட்கொள்ளும் உணவுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வீடுகளில் உணவை பெரிதும் வீணடிப்பதால் தான் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

மக்கள் அனைவரும் தங்கள் சாப்பிடும்போது விட்டுச்செல்லும் சிறு சிறு அளவிலான உணவு விரையம் தான் மொத்தத்தில் அதிகமான உணவு கழிவாக மாறுகிறது.

உணவுக் கழிவு நெருக்கடியைச் சமாளிக்க UNEP பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிலையான உணவு முறைகள் திட்ட அதிகாரி கிளெமென்டைன் ஓகானர் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2013 இல் Think Eat Save உலகளாவிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது.

இது நிலையான வளர்ச்சி இலக்கு 12.3 ஆன,  2030க்குள், சில்லறை மற்றும் நுகர்வோர் மட்டங்களில் தனிநபர் உலகளாவிய உணவுக் கழிவுகளை பாதியாகக் குறைத்து, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் உட்பட உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் உணவு இழப்புகளைக் குறைக்க செய்ய முயல்கிறது.

GO4SDGS  முன்முயற்சியின் ஒரு பகுதியாக UNEP இப்போது ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக், லத்தீன் அமெரிக்கன், கரீபியன் மற்றும் மேற்கு ஆசியாவில் பிராந்திய உணவுக் கழிவு மேலாண்மைப் பணிக் குழுக்களைத் தொடங்கியுள்ளது.


உலகளவில் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது ஐக்கிய நாடுகள் அறிவிப்பு உலகளவில் உணவு உற்பத்தி செய்யும் அளவையும் உலக மக்கள் உட்கொள்ளும் அளவையும் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) குழு உணவுக் கழிவு குறியீட்டு அறிக்கை தயாரித்து வெளியிட்டுதுள்ளது.குழுவின் கூற்றுப்படி உலகில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உண்ணாமல் வீணடிக்கப்படுகிறது. இந்த உலகளாவிய உணவு விரயம் என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். மதிப்பீடுகளின்படி, உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 8-10 சதவீதம் உட்கொள்ளப்படாத உணவுகளால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.UNEP இன் உணவுக் கழிவு  அறிக்கையானது உணவுக் கழிவுகளை அளவிடுவதற்கும், நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 12.3 இல் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் ஒரு பொதுவான வழிமுறையை வழங்குகிறது. காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு மற்றும் மாசு மற்றும் கழிவு போன்ற நெருக்கடியை சமாளிக்க உணவு முறை சீர்திருத்தம் குறிப்பிடத்தக்கது என்று UNEP அறிக்கை குறிப்பிடுகிறது.உற்பத்தி மற்றும் உட்கொள்ளும் உணவுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வீடுகளில் உணவை பெரிதும் வீணடிப்பதால் தான் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.மக்கள் அனைவரும் தங்கள் சாப்பிடும்போது விட்டுச்செல்லும் சிறு சிறு அளவிலான உணவு விரையம் தான் மொத்தத்தில் அதிகமான உணவு கழிவாக மாறுகிறது.உணவுக் கழிவு நெருக்கடியைச் சமாளிக்க UNEP பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிலையான உணவு முறைகள் திட்ட அதிகாரி கிளெமென்டைன் ஓகானர் கூறினார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2013 இல் Think Eat Save உலகளாவிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது.இது நிலையான வளர்ச்சி இலக்கு 12.3 ஆன,  2030க்குள், சில்லறை மற்றும் நுகர்வோர் மட்டங்களில் தனிநபர் உலகளாவிய உணவுக் கழிவுகளை பாதியாகக் குறைத்து, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் உட்பட உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் உணவு இழப்புகளைக் குறைக்க செய்ய முயல்கிறது.GO4SDGS  முன்முயற்சியின் ஒரு பகுதியாக UNEP இப்போது ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக், லத்தீன் அமெரிக்கன், கரீபியன் மற்றும் மேற்கு ஆசியாவில் பிராந்திய உணவுக் கழிவு மேலாண்மைப் பணிக் குழுக்களைத் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement